Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
தமிழ்நாடு காவல்துறையை இழிவுபடுத்தி பேசிய வழக்கில் விசிக பொறுப்பாளர்களை தேடுவதாக திருவண்ணாமலை காவல்துறை அறிவித்திருப்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.

”விசிக எனும் கட்சி பெயரில் பிராத்தல், கட்டப்பஞ்சாயத்து ,வழிப்பறி , கஞ்சா கடத்தும் ஆரணி தொகுதி பொறுப்பாளர்களை தேடும் காவல் துறை” என்பதாக காவல்துறை அறிவிப்பு புகைப்படம் பரப்பப்படுகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
தமிழ்நாடு காவல்துறையை இழிவுபடுத்தி பேசிய வழக்கில் விசிக பொறுப்பாளர்களை தேடுவதாக திருவண்ணாமலை காவல்துறை அறிவித்திருப்பதாகப் பரவும் புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து அறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
இதுகுறித்த தேடலில், காவல்துறையை தரக்குறைவாக விமர்சித்த பகலவன் பாஸ்கரை இடைநீக்கம் செய்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் என்கிற செய்தி கிடைத்தது. தனது டிவிட்டர் பக்கத்திலும் இதனை தெரிவித்துள்ளார் திருமாவளவன்.
வேலூர் சிறையில் இருந்து பிணையில் வெளிவந்த பகலவன் பாஸ்கரன் ஆரணி நகருக்குள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட நிலையில் காவல்துறைக்கு எதிராக அவரும் அவரது ஆதரவாளர்களும் குரல் எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “இது திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட செய்தி அல்ல” என்று வைரலாகும் அறிவிப்பு புகைப்படம் போலியானது என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
Also Read: பிரதமர் குறித்த ஆவணப்படத்தை தயாரித்த பிபிசி தயாரிப்பாளரை ராகுல் காந்தி சந்தித்தாரா?
விசிக பொறுப்பாளர்களைத் தேடும் திருவண்ணாமலை காவல்துறை என்று வெளியாகிய அறிவிப்பு புகைப்படம் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Twitter Post From, Tiruvannamalai District Police, Dated January 29, 2023
Twitter Post From, Thol. Thirumavalavan, Dated January 30, 2023
Report From, Nakkheeran, Dated January 30, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
April 2, 2025
Ramkumar Kaliamurthy
February 8, 2025
Ramkumar Kaliamurthy
December 16, 2024