குரூப் 2 விடைத்தாள்கள் தண்ணீரில் நனைந்து விட்டதால் தேர்வு முடிவுகள் தாமதமாவதாக தந்தி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள அலுவலர் பணியிடங்களை நிரப்ப , கடந்த மே மாதம் போட்டி தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவுகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில் விடைத்தாள்கள் தண்ணீரில் நனைந்து விட்டதாலும், மதிப்பீடு செய்யும் இயந்திரங்கள் பழுது ஏற்பட்டிருப்பதாலும் தேர்வு முடிவுகள் தாமதமாவதாக தந்தி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
தந்தி தொலைக்காட்சியின் வெளியிட்ட இச்செய்தியை நம்பி பலரும் இதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தேவதாசி முறை மீண்டும் வேண்டும் என்றாரா நடிகை கஸ்தூரி?
Fact Check/Verification
குரூப் 2 விடைத்தாள்கள் தண்ணீரில் நனைந்து விட்டதால் தேர்வு முடிவுகள் தாமதமாவதாக தந்தி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
இந்த ஆய்வில் இத்தகவல் தவறானது என்பதை அறிய முடிந்தது. ஊடகங்களில் வெளிவந்த இந்த செய்தியை மறுத்து தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான முதல்நிலை எழுத்துத்தேர்வு கடந்த 21/5/2022 அன்று நடைப்பெற்றது. இதற்கிடையே மகளிருக்கான இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு வழக்குகள் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன.மேற்படி வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பினை வழங்கிய நிலையில் அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தின் ஆணைகளை செயல்படுத்துவது தொடர்பாக மென்பொருளில் உரிய மாற்றங்கள் செய்யும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. அப்பணி நிறைவுற்ற பின்னர் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இது தொடர்பாக செய்தி அல்லது சமூக ஊடகங்களில் வெளிவரும் ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம்.
என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Also Read: ஜெயலலிதா காலில் ப.சிதம்பரம் விழுந்தாரா?
Conclusion
குரூப் 2 விடைத்தாள்கள் தண்ணீரில் நனைந்து விட்டதால் தேர்வு முடிவுகள் தாமதமாவதாக தந்தி தொலைக்காட்சி வெளியிட்ட செய்தி தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Sources
Press Release, from tnpsc.gov.in, on October 28, 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)