Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
தேவதாசி முறை மீண்டும் வேண்டும் என்று நடிகை கஸ்தூரி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
“தேவதாசி முறை இருந்தவரை நாட்டில் கற்பழிப்பு இல்லை. முற்போக்கு பேசும் திராவிட கூட்டம் சதி செய்து இந்த அருமையான திட்டத்தை ஒழித்தார்கள். ராஜராஜன் காலத்தில் என்னுடைய முன்னோர்களும் தேவதாசியாக வாழ்ந்ததை எண்ணி பெருமை கொள்கிறேன். மீண்டும் தேவதாசி முறை வேண்டும்” என்று நடிகை கஸ்தூரி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தீபாவளிக்கு ₹600 கோடி மது விற்க இலக்கு வைக்கப்பட்டுள்ளதா?
Fact Check/Verification
தேவதாசி முறை மீண்டும் வேண்டும் என்று நடிகை கஸ்தூரி கூறியதாக நியூஸ்கார்ட் வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். ஒன் இந்தியா தமிழின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால், இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை அந்நிறுவனம் வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இத்தேடலில் இவ்வாறு நியூஸ்கார்டை ஒன் இந்தியா தமிழ் வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை. மாறாக, வைரலாகும் இந்த நியூஸ்கார்ட் போலியானது என்று ஒன் இந்தியா மறுப்பு தெரிவித்திருந்ததை காண முடிந்தது.
ஒன் இந்தியா வெளியிட்ட இந்த மறுப்பு பதிவை நடிகை கஸ்தூரி மறுக்கீச்சு(Retweet) செய்துள்ளதையும் காண முடிந்தது.
Also Read: ஆவின் இனிப்புகளில் நெய்க்கு பதிலாக வனஸ்பதி பயன்படுத்தப்படுகின்றதா?
Conclusion
தேவதாசி முறை மீண்டும் வேண்டும் என்று நடிகை கஸ்தூரி கூறியதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Sources
Tweet, from Oneindia Tamil, on Oct 25, 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.