வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024
வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024

HomeFact Checkஜெயலலிதா காலில் ப.சிதம்பரம் விழுந்தாரா?

ஜெயலலிதா காலில் ப.சிதம்பரம் விழுந்தாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா காலில் ராஜ்ய சபா உறுப்பினர் ப.சிதம்பரம் விழுந்ததாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ஜெயலலிதா காலில் ப.சிதம்பரம் விழுந்ததாக பரவும் தகவல்

வாசகர் ஒருவர் நியூஸ்செக்கரின் வாட்ஸ்ஆப் உதவி எண்ணான 9999499044 என்கிற எண்ணுக்கு புகைப்படம் ஒன்றை அனுப்பி, அதன் உண்மைத்தன்மை குறித்து கேட்டிருந்தார்.

அப்புகைப்படத்தில் ஆண் ஒருவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா காலில் விழுகின்றார். அப்படத்தின் கீழ், “ஹெலிகாப்டரை வணங்குகிறார்கள், காலில் விழுகிறார்கள் என சொன்ன சிதம்பரம் ஜெயலலிதா காலில் வீழ்ந்த படம்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

Source: WhatsApp Bot

சமூக வலைத்தளங்களில் பலரும் இப்படத்தை பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.

ஜெயலலிதா காலில் ப.சிதம்பரம் விழுந்ததாக பரவும் தகவல் - 02
Screenshot from Facebook / rijin.roshan
ஜெயலலிதா காலில் ப.சிதம்பரம் விழுந்ததாக பரவும் தகவல் - 03
Screenshot from Facebook / mdmkinternetwing

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தேவதாசி முறை மீண்டும் வேண்டும் என்றாரா நடிகை கஸ்தூரி?

Fact Check/Verification

மறைந்த முதல்வர் ஜெயலலிதா காலில் ராஜ்ய சபா உறுப்பினர் ப.சிதம்பரம் விழுந்ததாக கூறி புகைப்படம் ஒன்று வைரலாவதை தொடர்ந்து அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அதுக்குறித்து தேடினோம்.

இத்தேடலானது தமிழ்நாடு பாலிட்டிக்ஸ் பிளாக்ஸ்பாட் எனும் தளத்திற்கு நம்மை அழைத்து சென்றது. இத்தளத்தில்  ஜெயலலிதா காலில் விழும் தமிழ்நாட்டு அமைச்சர்கள் (Tamil Nadu ministers falling at Jayalalitha’s feet) என தலைப்பிட்டு பல படங்கள் இடம்பெற்றிருந்தது. அதில், அமைச்சர் தம்பிதுரை என வைரலாகும் இடம்பெற்றிருந்தது.

ஜெயலலிதா காலில் ப.சிதம்பரம் விழுந்ததாக பரவும் தகவல் - 04
Source: tamilnadupolitics.blogspot.com

அந்த தளத்தில், தம்பிதுரை தவிர்த்து, வளர்மதி, வைத்தியலிங்கம், வேலுச்சாமி, சுந்தரம், பன்னீர்செல்வம், செம்மலை, சண்முகநாதா, பொன்னையன், தனபால், பாண்டுரங்கன், அன்வர் ராஜா, ஜெயக்குமார், ஜீவானந்தன் ஆகியோர் ஜெயலலிதா காலில் விழும் படமும் இடம்பெற்றிருந்திருந்தது.

Also Read: ஆவின் இனிப்புகளில் நெய்க்கு பதிலாக வனஸ்பதி பயன்படுத்தப்படுகின்றதா?

Conclusion

மறைந்த முதல்வர் ஜெயலலிதா காலில் ராஜ்ய சபா உறுப்பினர் ப.சிதம்பரம் விழுந்ததாக பரவும் புகைப்படம் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources

Post, from tamilnadupolitics.blogspot.com, on Sep 13, 2005

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular