Fact Check
மதுரை தவெக மாநாடு பற்றி பேச மறுத்த விஜய் தந்தை SAC என்ற வீடியோ தகவல் உண்மையா?
Claim
மதுரை தவெக மாநாடு குறித்து பதிலளிக்க மறுத்த விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்
Fact
வைரலாகும் வீடியோ கடந்த 2024ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.
மதுரை தவெக மாநாடு குறித்து பதிலளிக்க மறுத்த விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”நிருபர் :- மதுரை மாநாடு பத்தி சொல்லுங்க SAC :- மாநாடு பத்தி இவர் கிட்ட கேளுங்க விஜய் அப்பன் கால்ல விழுந்து மதுரை மாநாட்டுக்கு கூட்டிட்டு வந்து இருப்பான் போல” என்று இந்த வீடியோ பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தவெக மதுரை மாநாட்டின் கார் பார்க்கிங்கில் குவிந்திருந்த வாகனங்கள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check/Verification
மதுரை தவெக மாநாடு குறித்து பதிலளிக்க மறுத்த விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த 2024ஆம் ஆண்டு முதலே இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் இடம்பெற்றிருப்பதை நம்மால் காண முடிந்தது.
மேலும், வைரலாகும் வீடியோவில் தமிழ் ஜனம் டிவியின் லோகோ இடம்பெற்றிருந்த நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தை ஆராய்ந்தோம். அதில், கடந்த அக்டோபர் 12, 2024 அன்று “விஜய் முதல் மாநாடு- எஸ்ஏசி VS வெங்கட் பிரபு” என்று இந்த வீடியோ இடம்பெற்றிருந்தது.
அதுமட்டுமின்றி, தவெகவின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ல் நடைபெற்ற நிலையில் அதற்கு முன்பாக எஸ்.ஏ.சந்திரசேகரிடம் இந்த கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அவர் இவ்வாறு மாநாடு குறித்து வெங்கட் பிரபுவிடம் கேளுங்கள்; அவர்தான் அந்த திரைப்படத்தை எடுத்தவர் என்பதாக பதிலளித்திருந்தார். இந்த செய்தி செய்தி ஊடகங்களிலும் இடம்பெற்றுள்ளது.

குறிப்பிட்ட இந்த வீடியோவே தற்போது மதுரை மாநாட்டுடன் தொடர்பு படுத்தி பரப்பப்படுகிறது. மதுரை மாநாட்டில் தவெக தலைவர் விஜய் பெற்றோரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
Also Read: தவெக தலைவர் விஜய் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வாங்கிய கேரவன் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Conclusion
மதுரை தவெக மாநாடு குறித்து பதிலளிக்க மறுத்த விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் என்று பரவும் வீடியோ கடந்த 2024ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube Video by, Tamil Janam News, dated October 12, 2024
News Report from, FilmiBeat, Dated October 16, 2024