Fact Check
டெல்லி To குஜராத் துவாரகா நெடுஞ்சாலை என்று பரவும் துபாய் புகைப்படம்!
Claim: டெல்லி முதல் குஜராத் வரை துவாரகா நெடுஞ்சாலை. அதிவிரைவு 14 வழிச்சாலை பயன்படுத்தப்படுகிறது.
Fact: வைரலாகும் நெடுஞ்சாலை துபாயில் அமைந்துள்ள ஷேக் சையது சாலை ஆகும்.
டெல்லி To குஜராத் நெடுஞ்சாலை என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“டெல்லி முதல் குஜராத் வரை துவாரகா நெடுஞ்சாலை. அதிவிரைவு 14 வழிச்சாலை பயன்படுத்தப்படுகிறது” என்று இந்த புகைப்படம் வைரலாகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தமிழகத்தில் 11 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்ததா பாஜக?
Fact Check/Verification
டெல்லி To குஜராத் நெடுஞ்சாலை என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம். அதன்முடிவில், பகிரப்படும் புகைப்படத்தில் இருக்கும் நெடுஞ்சாலை துபாயில் அமைந்திருக்கும் “Sheikh Zayed Road ” என்பது நமக்கு உறுதியாகியது.
குறிப்பிட்ட நெடுஞ்சாலையே தற்போது குஜராத் வரையிலான துவாரகா நெடுஞ்சாலை என்று பரவுகிறது என்பது நமக்கு உறுதியாகியது.
Also Read: தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை நிறுத்தப்பட்டதா?
Conclusion
டெல்லி To குஜராத் நெடுஞ்சாலை என்று பரவும் புகைப்படம் துபாய் ஷேக் சையது சாலை என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Missing Context
Our Sources
YouTube Video From, 18 Raaj, Dated December 16, 2017
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)