வெள்ளிக்கிழமை, மே 17, 2024
வெள்ளிக்கிழமை, மே 17, 2024

HomeFact Checkகுஜராத்தில் ராகுல் காந்தி ரோடு ஷோ என்று பரவும் தவறான வீடியோ!

குஜராத்தில் ராகுல் காந்தி ரோடு ஷோ என்று பரவும் தவறான வீடியோ!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: குஜராத்தில் ராகுல் காந்தி ரோடு ஷோ என்று பரவும் வீடியோ

Fact: வைரலாகும் வீடியோ கேரளாவின் வயநாட்டில் எடுக்கப்பட்டதாகும்.            

குஜராத்தில் ராகுல் காந்தி ரோடு ஷோ நடத்தியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

குஜராத்தில் ராகுல் காந்தி ரோடு ஷோ நடத்தியதாக பரவும் வீடியோ

X Link | Archive Link

குஜராத்தில் ராகுல் காந்தி ரோடு ஷோ நடத்தியதாக பரவும் வீடியோ

Facebook Link

குஜராத்தில் ராகுல் காந்தி ரோடு ஷோ நடத்தியதாக பரவும் வீடியோ

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: எந்த கட்சிக்கு ஓட்டு போட்டாலும் பாஜகவுக்கே ஓட்டு விழுந்ததால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடைக்கப்பட்டதா?

Fact Check/Verification

குஜராத்தில் ராகுல் காந்தி ரோடு ஷோ நடத்தியதாக பரவும் வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி வைரலாகும் வீடியோ குறித்து தேடினோம்.

இத்தேடலில் இவ்வீடியோவானது கேரளாவின் வயநாட்டில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு இந்திய இளைஞர் காங்கிரஸ் அதன் எக்ஸ் பக்கத்தில் ஏப்ரல் 03, 2024 அன்று பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.

குஜராத்தில் ராகுல் காந்தி ரோடு ஷோ நடத்தியதாக பரவும் வீடியோ

இதனை தொடர்ந்து தேடுகையில் ராஜஸ்தான், ஹரியானா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களின் இளைஞர் காங்கிரஸ் சமூக ஊடகப் பக்கங்களிலும் இவ்வீடியோ பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது. அப்பதிவுகளிலும் இவ்வீடியோவானது வயநாட்டில் எடுக்கப்பட்டது என்றே குறிப்பிடப்பட்டிருந்தது,

தொடர்ந்து தேடுகையில் ராகுல் காந்தி கடந்த மாதம் 03 ஆம் தேதி (ஏப்ரல் 03, 2024) வயநாடு தொகுதியில் போட்டியிட வேட்பு மனு கொடுப்பதற்கு ஊர்வலமாக சென்றபோது இவ்வீடியோ எடுக்கப்பட்டது என அறிய முடிந்தது.

Also Read: மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் ST, SC, OBC இடஒதுக்கீடுகள் ரத்து செய்யப்படும் என்றாரா அமித் ஷா?

Conclusion

குஜராத்தில் ராகுல் காந்தி ரோடு ஷோ நடத்தியதாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும். உண்மையில் அந்த ஊர்வலம் கேரளாவின் வயநாட்டில் நடந்ததாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Our Sources
Tweet Post from Indian Youth Congeress, Dated 03 April 2024
Report from NDTV, Dated 03 April 2024

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular