Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
Claim: போதை மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்று – வெற்றிமாறன்.
Fact: வைரலாகும் செய்தி எடிட் செய்யப்பட்டு பரவுகிறது.
போதை மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்று என்று இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“ போதை மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்று – வெற்றிமாறன். தமிழ் சினிமாவ மொத்தமா NCB கஸ்டடி எடுத்தாதான் தமிழ்நாட்ட காப்பாத்த முடியும் போல” என்று இந்த பதிவு பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
போதை மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்று என்று இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாக பரவும் செய்தி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் செய்தி தமிழ் இந்து நாளிதழ் வெளியிட்டதாகப் பரவிய நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக வலைத்தளத்தை ஆராய்ந்தோம்.
அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் “இறைச்சி… இன்று அடிப்படை உரிமைகளில் ஒன்று!” – வெற்றிமாறன்” என்று அவர் பேசியதாகவே செய்தி வெளியாகியிருந்தது.
மேலும், இந்து நாளிதழ் பக்கத்திலும் இதே தலைப்பிலேயே செய்தி வெளியாகியிருந்தது. சமூக வலைத்தளத்தில் அவர்கள் வெளியிட்டிருந்த செய்தியை எடுத்தே அதில் இறைச்சி என்கிற வார்த்தையை எடிட் செய்து போதை என்கிற வார்த்தையை இணைத்துள்ளனர் என்பது நமக்கு உறுதியாகியது.
உப்புகண்டம் மெஸ் என்கிற உணவகத்திறப்பு விழா ஒன்றில் கடந்த பிப்ரவரியில் பேசியிருந்த வெற்றிமாறன், “இறைச்சி என்பது மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று; ஆனால், இன்று அது அடிப்படை உரிமைகளில் ஒன்றாக மாறிவிட்டது” என்பதாகப் பேசியிருந்தார்.
இதுகுறித்த வீடியோவும் நமக்கு யூடியூப் பக்கம் ஒன்றில் வெளியாகியிருப்பது கிடைத்தது. அதிலும், அவரது இறைச்சி பற்றிய இந்த உரை இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் ST, SC, OBC இடஒதுக்கீடுகள் ரத்து செய்யப்படும் என்றாரா அமித் ஷா?
Conclusion
போதை மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்று என்று இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாக பரவும் செய்தி எடிட் செய்யப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Image
Our Sources
Report From, Tamil The Hindu, Dated February 26, 2024
Facebook Post from Tamil The Hindu , Dated February 26, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.