நடிகர் விஜய் தலையில் அணிந்திருந்த விக் கழண்டதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் பொது விழா ஒன்றில் கலந்துக் கொண்டிருக்கையில், அவர் கழுத்திலிருந்த பதக்கத்தை கழற்ற முற்படும்போது, தலையில் அணிந்திருந்த விக்கும் கழண்டதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சூரிய பிரகாஷ் என்பவர் ஏப்ரல் 15 அன்று இந்த வீடியோவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இப்பதிவை இதுவரை 3500 பேர் ஷேர் செய்துள்ளனர், 499 பேர் கமெண்ட் செய்துள்ளனர் மற்றும் 5500 பேருக்கு மேற்பட்டோர் ரியாக்ட் செய்துள்ளனர்.

இவரைத் தொடர்ந்து பலரும் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.


சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
நடிகர் விஜய் தலையில் அணிந்திருந்த விக் கழண்டதாக கூறி வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவை காணும்போதே அது பொய்யாக எடிட் செய்யப்பட்டது என்பதை நம்மால் உணர முடிகின்றது. ஏனெனில் வீடியோவில் விக் என்று கூறப்படும் முடியானது எந்த நெளிவும் இல்லாமல் கம்பி போன்று நீட்டிக்கொண்டு உள்ளது.

இருப்பினும் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருவதால் இதன் உண்மைத்தன்மை ஆதாரப்பூர்வமாக விளக்க இதுக்குறித்து ஆய்வு செய்தோம். விஜயின் கருத்திலிருக்கும் மெடலை காணும்போது, இது பிஹைண்ட்வுட்ஸ் விருது வழங்கும் விழா என்று அறிய முடிந்தது. எனவே பிஹைண்ட்வுட்ஸ் விருது விழாவில் விஜய் கலந்துக் கொண்ட வீடியோக்கள் குறித்து தேடினோம்.
இத்தேடலில் விஜய் மெடலை கழற்றும் உண்மையான வீடியோவை கண்டறிந்தோம். அதில் விஜயின் விக் கழண்டு விழுவது போன்ற எந்த சம்பவமும் காணப்படவில்லை.
வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான வீடியோவின் ஸ்கிரீஸ்ஷாட்டையும் எடிட் செய்யப்பட்ட வீடியோவின் ஸ்கிரீன்ஷாட்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

Also Read: கிணறு தோண்டும்போது பீறிட்ட வெள்ளம்; வைரலாகும் வீடியோ அமராவதி மாவட்டத்தில் எடுக்கப்பட்டதா?
Conclusion
நடிகர் விஜய் தலையில் அணிந்திருந்த விக் கழண்டதாக கூறி பரப்பப்படும் வீடியோவானது பொய்யாக எடிட் செய்யப்பட்டது என்பது நமது ஆய்வில் கிடைத்த ஆதாரங்களின்படி தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered
Source
Behindwoods
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)