சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact Checkஅமெரிக்க நாளிதழ் வெளியிட்ட காங்கிரஸ் பற்றிய கேலிச்சித்திரமா இது? உண்மை என்ன?

அமெரிக்க நாளிதழ் வெளியிட்ட காங்கிரஸ் பற்றிய கேலிச்சித்திரமா இது? உண்மை என்ன?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

அமெரிக்க நாளிதழ் வெளியிட்ட கார்ட்டூன் என்பதாகவும், காங்கிரஸ் ஆட்சியை கேலி செய்வது போல அது அமைக்கப்பட்டிருப்பதாகவும் புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

அமெரிக்க நாளிதழ்
Source: Facebook

கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து 2021ஆம் ஆண்டு வரையில் மக்கள் நிலைமை என்பதாக இரண்டு நபர்கள் இடம்பெற்றிருப்பது போன்ற கேலிச்சித்திரம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. ஒருபக்கம் காங்கிரஸ் என்கிற வாசகமும், மற்றொரு பக்கம் இந்தியா என்கிற வாசகத்துடனும் இந்த கார்ட்டூன் இருவேறு விதமாக வைரலாகிறது.

அதில், “அமெரிக்காவில் உள்ள பிரபல நாளிதழ் வெளியிட்ட கார்ட்டூன், செருப்ப சாணியில முக்கி அடிச்சிருக்கான்” என்பதாகவும் கூடவே சித்திரத்தின் உள்ளே காங்கிரஸ் என்கிற வார்த்தையும் இடம்பெற்றுள்ளது. கூடவே, “பாவம் ஜோதிமணி அக்காவால இத எப்படித் தாங்க முடியுமோ?” என்கிற வாசகங்களுடன் பரப்பி வருகின்றனர். தமிழ்நாடு பாஜகவைச் சேர்ந்த செளதாமணி என்கிற பெண்மணியும் இதனைத் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

Source: Twitter

Archived Link

அமெரிக்க நாளிதழ்
Source: Facebook

Facebook Link

அமெரிக்க நாளிதழ்
Source: Facebook

Facebook Link

அமெரிக்க நாளிதழ்
Source: Facebook

Facebook Link

Source: Twitter

Archived Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: நல்லாட்சி குறியீடு பட்டியலில் தமிழ்நாட்டிற்கு 18வது இடமா?

Fact check/Verification

அமெரிக்க நாளிதழ் வெளியிட்ட காங்கிரஸ் பற்றிய கேலிச்சித்திரம் என்பதாக வைரலாகும் கார்ட்டூன் புகைப்படச் செய்தி குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

முதலாவதாக, குறிப்பிட்ட கார்ட்டூன் உண்மையில் அமெரிக்க நாளிதழ்கள் ஏதேனும் வெளியிட்டதா என்பதை ஆராய்ந்தோம். ஆனால், பிரபல அமெரிக்க நாளிதழ்கள் எதிலும் இதுபோன்ற கேலிச்சித்திரம் வெளியானதாகத் தெரியவில்லை.

எனவே, வைரலாகும் கார்ட்டூனை ஆராய்ந்ததில் அதில் இந்திய மொழி ஒன்றில் கார்ட்டூன் வரைந்தவர் பெயரும், ஆங்கிலத்தில் ‘NewsClick’ என்கிற வார்த்தையும் இடம்பெற்றிருந்தது.

Source: Facebook

எனவே, குறிப்பிட்ட கார்ட்டூனை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலமாக தேடியபோது, இந்தியாவில் இருந்து செயல்படும் டிஜிட்டல் செய்தி ஊடகமான ‘NewsClick’ குறிப்பிட்ட கார்ட்டூனை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதியன்று வெளியிட்டுள்ளது என்பது நமக்குத் தெரியவந்தது.

“வருடா வருடம் தொடரும் ஆடைகளின் அணிவகுப்பு; அரசாங்கம் வளர்ச்சிப் பாதையில்தான் நகர்கிறது.” என்பதான அர்த்தம் தொனிக்கும் வாசகங்கள் இந்தியில் இந்த கார்ட்டூன் தொடர்பான செய்தியில் இடம் பெற்றுள்ளன. மேலும், ஏழு வருட ஆட்சியின் வளர்ச்சியை கார்ட்டூனிஸ்ட் இர்பானின் இந்த கேலிச்சித்திரம் எடுத்துரைக்கிறது என்கிற வாசகங்களும் இடம் பெற்றுள்ளன.

Source: NewsClick

குவாலியரைச் சேர்ந்த இர்பான் தற்போது NewsClick செய்தி ஊடகத்திற்கு கேலிச்சித்திரங்களை வரைந்து வருகிறார். மேலும், குறிப்பிட்ட செய்தி ஊடகத்தில் ‘Dress Rehearsal’ என்கிற தலைப்பில் இடம்பெற்றுள்ள கார்ட்டூனில் வருடங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன; இந்தியா என்கிற வாசகமோ, காங்கிரஸ் என்கிற வாசகமோ இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Source: Facebook

Facebook Link

சமுதாயக் குற்றங்கள் மற்றும் ஆளும் அரசின் தவறான கொள்கைகளைச் சுட்டிக் காட்டும் வகையிலான கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது NewsClick. கடந்த வருடம், பிப்ரவரி 9 ஆம் தேதியன்று NewsClick நிறுவனரான பிரபீர் புர்கயஸ்தாவிற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை கிட்டதட்ட 12 மணி நேரம் சோதனை நடத்தியது என்று NDTV மற்றும் பிரபல ஊடகங்கள் வெளியிட்ட செய்தி குறிப்பிடத்தக்கது.

Source: NDTV

எனவே, குறிப்பிட்ட கேலிச்சித்திரம் அமெரிக்க நாளிதழ் வெளியிட்டதில்லை என்பதும், இந்தியா என்கிற வாசகமோ, காங்கிரஸ் என்கிற வாசகமோ அதில் இடம்பெறவில்லை என்பதும் இதன்மூலம் உறுதியாகிறது.

Conclusion

அமெரிக்க நாளிதழ் வெளியிட்ட காங்கிரஸ் பற்றிய கேலிச்சித்திரம் என்பதாக வைரலாகும் கார்ட்டூன் புகைப்படச் செய்தி தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Manipulated Media

Our Sources

News Click

NDTV

CARAVAN

Cartoonist Irfan

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular