திங்கட்கிழமை, ஜூன் 17, 2024
திங்கட்கிழமை, ஜூன் 17, 2024

HomeFact CheckViral‘ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாட்டின் சாலை’ என்று பகிரப்படும் தவறான படம்!

‘ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாட்டின் சாலை’ என்று பகிரப்படும் தவறான படம்!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாட்டின் சாலை

Fact: வைரலாகும் படம் பழைய படமாகும்

‘ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாட்டின் சாலை’ என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாட்டின் சாலை என்று குறிப்பிட்டு ஒன்று வைரலாகி வரும் படம்
Screenshot from Twitter@SowdhaMani7
ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாட்டின் சாலை என்று குறிப்பிட்டு ஒன்று வைரலாகி வரும் படம்
Screenshot from Facebook//soappraba
ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாட்டின் சாலை என்று குறிப்பிட்டு ஒன்று வைரலாகி வரும் படம்
Screenshot from Facebook/prema.seetharaman

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: கேரளாவில் ஆர்எஸ்எஸ் பெண் முஸ்லீம்களால் கொல்லப்பட்டதாக பரவும் வதந்தி!

Fact Check/Verification

‘ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாட்டின் சாலை’ என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அப்படம் குறித்து தேடினோம்.

இத்தேடலில் LANDO Zawawi – Brotherhood Malaysia எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் டிசம்பர் 26, 2019 அன்று வைரலாகும் இப்படம் மலேசியாவில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டிருப்பதை காண முடிந்தது.

இதை தவிர்த்து தொடர்ந்து தேடுகையில் 2020 ஆண்டில் எந்த பகுதி என்று குறிப்பிடாமல் இதே படம் சமூக வலைத்தளங்களில் பரவியிதை நம்மால் காண முடிகின்றது. அப்பதிவுகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.

நமது ஆய்வில் வைரலாகும் இப்படம் எப்போது, எங்கே எடுக்கப்பட்டது என்பது குறித்த தெளிவான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் இப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்தே சமூக ஊடகங்களில் பரவி வருவதை நம்மால் காண முடிகின்றது.

அதே சமயம் ஸ்டாலின் தலைமையிலான திமுக 2021ஆம் ஆண்டே ஆட்சிப்பொறுப்பிற்கு வந்தது. இதனடிப்படையில் பார்க்கையில் திமுகவிற்கும் வைரலாகும் இப்படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தெளிவாகின்றது.

Also Read: பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலந்து இந்துக்களுக்கு விற்பனை செய்த முஸ்லீம் நபர் கைதா?

Conclusion

‘ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாட்டின் சாலை’ என்று குறிப்பிட்டு ஒன்று வைரலாகி வரும் படம் பழைய புகைப்படம் என்பதும், ஸ்டாலின் ஆட்சிக்கும் அப்படத்திற்கும் தொடர்பில்லை என்பதும் நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகின்றது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Facebook Post from LANDO Zawawi – Brotherhood Malaysia, Dated December 26, 2019

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular