ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 6, 2024
ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 6, 2024

HomeFact CheckViralஇந்தியன் ஆயில் அதானி குழுமத்துக்கு விற்கப்பட்டதா?

இந்தியன் ஆயில் அதானி குழுமத்துக்கு விற்கப்பட்டதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

இந்தியன் ஆயில் நிறுவனம் அதானி குழுமத்துக்கு விற்கப்பட்டதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இந்தியன் ஆயில் குறித்து வைரலாகும் பதிவு - 1
Source: Facebook

Archive Link:https://archive.vn/O5H0C

இந்தியன் ரயில்வே,  விமான நிலையம், எல்.ஐ.சி உட்பட பல பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு முடிவெடுத்துள்ள விஷயம் அனைவரும் அறிந்ததே.

அதானி, அம்பானி போன்ற பணக்காரர்களின் சுயநலத்திற்காகவே இதுப்போன்ற திட்டங்களை கொண்டு வந்ததாக மத்தியில் ஆளும் பாஜக அரசு மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனம் அதானி குழுமத்திற்கு விற்பனை செய்யப்பட்டதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில்  பரவி  வருகின்றது.

இந்தியன் ஆயில் குறித்து வைரலாகும் பதிவு - 2
Source: Facebook

Archive Link:https://archive.vn/HH74k

இந்தியன் ஆயில் குறித்து வைரலாகும் பதிவு - 3
Source: Facebook

Archive Link:https://archive.vn/EhpXT

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

இந்தியன் ஆயில் நிறுவனம் தானி குழுமத்துக்கு விற்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வைரலாகியதைத் தொடர்ந்து, இதன் பின்னணியில் இருக்கும் உண்மையைக் குறித்து அறிய இந்தியன் ஆயிலின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

நம் ஆய்வில் இந்தியன் ஆயில் நிறுவனம் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து கூட்டாக தொழில் புரிந்து வருகின்றது எனும் உண்மையை நம்மால் அறிய முடிந்தது.

அதானி குழுமத்துடன் சேர்த்து ஏறக்குறைய 21 தனியார் நிறுவங்கள் இந்தியன் ஆயிலுடன் இணைந்து தொழில் புரிந்து வருகின்றது. 

இந்தியன் ஆயில் கூட்டாக தொழில்புரியும் நிறுவனங்கள்
Source: Indian oil

 இந்தியன் ஆயில் நிறுவனம் அதானி குழுமத்துடன் கடந்த 2013 ஆண்டிலிருந்து கூட்டாக தொழில் புரிந்துவருகின்றது. 2013 ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் ஆயில் அதானி நிறுவனத்துடன் தொடர்பு குறித்த படம்
Source: Adanigas

மேலே கிடைக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது இந்தியன் ஆயில் அதானி குழுமத்திற்கு விற்பனை செய்யப்பட்டதாக பகிரப்படும் பதிவு தவறான ஒன்று என்பது தெளிவாகின்றது.

மத்திய அரசும் வைரலாகும் இந்தத் தகவலை மறுத்து டிவிட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது.

Source: Twitter

Conclusion

இந்தியன் ஆயில் நிறுவனம் அதானி குழுமத்துக்கு விற்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானது.  வைரலாகும் புகைப்படத்தில் இருக்கும் பெட்ரோல் நிலையம் அதானி குழுமம் மற்றும் இந்தியன் ஆயிலின் கூட்டில் உள்ள் IndianOil Adani Gas Pvt. Ltd. நிறுவனத்தைச் சார்ந்த பெட்ரோல் நிலையமாகும்.

இந்த உண்மையை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Fabricated

Our Sources

Facebook Profile: https://www.facebook.com/usman.ru.7/posts/3775303559232726

Facebook Profile: https://www.facebook.com/permalink.php?story_fbid=230886715397077&id=100054272492661

Indian Oil: https://iocl.com/AboutUs/GroupCompanies_JVs.aspx

Adani Gas: https://www.adanigas.com/-/media/Project/AdaniGas/Investors/Financials/Financials—-March-2019—Final.pdf?la=en#page=14

PIB: https://twitter.com/PIBFactCheck/status/1361987382510198784



(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular