வெள்ளிக்கிழமை, டிசம்பர் 6, 2024
வெள்ளிக்கிழமை, டிசம்பர் 6, 2024

HomeFact Checkதேசிய பாதுகாப்பு சட்டத்தில் அண்ணாமலை கைது செய்யப்பட வேண்டும் என்றாரா எடப்பாடி பழனிசாமி?

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அண்ணாமலை கைது செய்யப்பட வேண்டும் என்றாரா எடப்பாடி பழனிசாமி?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்

“போலியான வீடியோ வெளியிட்டு தமிழ்நாட்டில் மதம் சார்ந்து பதற்றமான சூழலை ஏற்படுத்த நினைத்த அண்ணாமலையை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.”  என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று  வைரலாகி வருகின்றது.

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் -1

Twitter Link | Archive Link

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் -2

Facebook Link

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் -3

Facebook Link

Also Read:
 தமிழக அலங்கார ஊர்தியில் கருணாநிதி சிலை இடம்பெற்றதால் நிராகரிக்கப்பட்டதா?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact check/ Verification

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக நியூஸ்கார்ட்  வைரலானதைத் தொடர்ந்து இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

முன்னதாக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மேற்காணும் கூற்றை பேசியுள்ளாரா என்பதை அறிய அவரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் மற்றும் பொது ஊடகங்களில் இதுக்குறித்து தேடினோம். அதில் இந்த கூற்றை அவர் பேசியதாக எந்த ஒரு தரவும் நமக்கு கிடைக்கவில்லை.

நியூஸ் 7 தமிழின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால் இந்த நியூஸ்கார்டை நியூஸ் 7 தமிழ் வெளியிட்டுள்ளதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இதில் நியூஸ் 7 தமிழ்  இவ்வாறு  நியூஸ்கார்டை வெளியிட்டதற்கான எந்த ஒரு தரவும் கிடைக்கவில்லை.  மாறாக வைரலாகும் இந்த நியூஸ்கார்ட் பொய்யானது என்று நியூஸ் 7 தமிழ் தரப்பில் வெளியிடப்பட்டிருந்த பதிவையே காண முடிந்தது.

Also Read: லாவண்யா உடலுக்கு உதயநிதி நேரில் அஞ்சலி செலுத்தாதது ஏமாற்றத்தை அளிக்கின்றது என்றாரா திமுக எம்.பி. பழனிமாணிக்கம்?

Conclusion

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Fabricated

Our Sources

News 7 Tamil

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular