செவ்வாய்க்கிழமை, நவம்பர் 19, 2024
செவ்வாய்க்கிழமை, நவம்பர் 19, 2024

HomeFact Checkகுழந்தைகளுக்கு பக்கவாதம் உருவாக்கும் Luppo கேக்; வைரலாகும் வீடியோவின் உண்மை பின்னணி!

குழந்தைகளுக்கு பக்கவாதம் உருவாக்கும் Luppo கேக்; வைரலாகும் வீடியோவின் உண்மை பின்னணி!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

சந்தைக்கு புதிதாக வந்துள்ள Luppo கேக் குழந்தைகளுக்கு பக்கவாதம் உருவாக்குவதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

Luppo கேக்

“Luppo என்ற பெயரில் ஒரு வகை “கேக்” சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. அதில் இரண்டு சிறிய மாத்திரைகள் உள்ளது. அது குழந்தைகளை முடக்கும் டேப்லெட் என்று சிலர் சொல்கிறார்கள். தயவுசெய்து, இந்த வீடியோவை பார்த்து புரிந்துக்கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். மேலும், இது பள்ளிக்கூடம் பகுதியில் மட்டுமே விற்கப்படுகிறது என்றும் தகவல் வருகிறது.” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

Luppo கேக் - 01
Screenshot from Twitter @thahir125
Luppo கேக் - 02
Screenshot from Facebook / Venkataraman Sitaraman
Luppo கேக் - 03
Screenshot from Facebook / niranjhankumar.kumar

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ராகுல் காந்தி தங்கை மகளுடன் இருக்கும் படத்தை தவறான கண்ணோட்டத்தில் பரப்பும் நெட்டிசன்கள்!

Fact Check/Verification

சந்தைக்கு புதிதாக வந்துள்ள Luppo கேக் குழந்தைகளுக்கு பக்கவாதம் உருவாக்குவதாக கூறி வீடியோ ஒன்று  வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

இந்த ஆய்வில் கடந்த 2019 ஆம் ஆண்டே துருக்கி மொழி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் இத்தகவல் குறித்த வந்த ஃபேக்ட்செக் கட்டுரைகளை காண முடிந்தது.  

துருக்கி ஃபேக்ட்செக் நிறுவனமான teyit  வெளியிட்டுள்ள கட்டுரையின் அடிப்படையில் காண்கையில் இந்த வீடியோ முதன்முதலில் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பகிரப்பட்டுள்ளது. Wishe Press எனும் யூடியூப் சேனலில் இது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகின்றது.

இந்த வீடியோவின் 45 ஆவது விநாடியில் ஒரு நபர் பேசும் குரலை கேட்க முடிகின்றது. அந்நபர் பேசும் மொழி சோரணி ஆகும். இம்மொழி ஈராக்கி குர்திஸ்தான் பகுதியில் பேசப்படும் மொழியாகும். ஈராக்கி குர்திஸ்தான் ஈராக்கின் வடக்கு பகுதியில் இருக்கும் பகுதியாகும்.

இந்த வீடியோவில் காணப்படும் மற்றொரு பொருளில் Aspiliç என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களை தயாரிக்கும் நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் அதிகப்படியாக ஈராக்கிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இதனடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் வீடியோ ஈராக்கில் படம்பிடிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

Luppo கேக் - 04

வைராலாகும் வீடியோவில் காணப்படும் Luppo கேக் துருக்கி நாட்டைச் சேர்ந்த  Solen எனும் நிறுவனத்தின் தயாரிப்பாகும். வீடியோவில் காணப்படும் கேக் ஏற்றுமதி செய்யப்படுவதற்காகவே தயாரிக்கப்படுவது என்று teyit  குறிப்பிட்டுள்ளது.  Solen நிறுவனம் teyit நிறுவனத்திற்கு வைரலாகும் கேக்கின் ஏற்றுமதி குறித்த தகவலை பகிர்ந்துள்ளது.

Luppo கேக் - 05
Source: Teyit


இதனைத் தொடர்ந்து Solen நிறுவனம் SGS எனும் நிறுவனம் மூலம் எடுக்கப்பட்ட தரக்கட்டுப்பாடு சான்றிதழ்களை Snopes நிறுவனம் வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

Source: Solen

மேலும் ஈராக்கி குர்தான் அரசு Solen நிறுவனத்தின் கேக்கில் எந்தவித மாத்திரையும் இல்லை, அவை பிறகு வேறு ஒரு சந்தர்பத்தில் கேக்கிற்குள் வைத்திருக்கலாம் என்று கூறியதாக teyit கூறியுள்ளது.

வடக்கு சிரியாவின்மீது துருக்கி மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை காரணமாக துருக்கி பொருட்களை புறக்கணிப்பு வடக்கு ஈராக் பகுதியில் நடைப்பெற்றது. இவ்வீடியோ அதன் காரணமாக கூட உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று teyit கூறியுள்ளது.

Also Read: லென்ஸ் மூடியை கழற்றாமல் கேமராவை பயன்படுத்தினாரா பிரதமர் மோடி?

Conclusion

நமக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் காண்கையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் Luppo கேக் துருக்கி நாட்டிச் சேர்ந்த நிறுவனம் என்பதும், இந்நிறுவனம் ஈராக்குக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருளை கொண்டு வைரலாகும் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் தெளிவாகின்றது. ஆகவே இவ்வீடியோவுக்கும் இந்தியாவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது உறுதியாகின்றது

(இந்த செய்தியானது ஏற்கனவே நியூஸ்செக்கர் குஜராத்தியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது)

Result: Missing Context

Sources

Fact Check Report Of teyit.orgsnopes.com on November 2019


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular