Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
ராகுல் காந்தியின் வாக்குரிமை அதிகார யாத்திரைக்கு கூடிய கூட்டம்.
வைரலாகும் வீடியோவுக்கும் வாக்குரிமை அதிகார யாத்திரைக்கும் தொடர்பில்லை. பூரி ஜெகந்நாதர் கோவிலின் ரத யாத்திரை வீடியோவே இவ்வாறு பரப்பப்படுகின்றது.
மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாக்காளர் அதிகார யாத்திரை என்கிற பெயரில் பீகாரில் யாத்திரை சென்றுக்கொண்டிருக்கின்றார்.
இந்நிலையில் இந்த யாத்திரைக்கு கூடிய கூட்டம் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. அவ்வீடியோவை திமுக சட்டப் பிரிவு நிர்வாகி நந்தகோபால உட்பட பலரும் பகிர்ந்து வருகின்றனர்.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: சீமானை நாய் என்று குறிப்பிட்டு அட்டைப்படம் வெளியிட்டதா விகடன்?
ராகுல் காந்தியின் வாக்குரிமை அதிகார யாத்திரைக்கு கூடிய கூட்டம் என்று வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாக பிரித்து அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம்.
அதில் @black_ace_photographyy என்கிற பயனர் ஐடியை கொண்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜூன் 9, 2025 அன்றே வைரலாகும் வீடியோவின் காட்சிகளுடன் வீடியோ ஒன்று பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது.
அதாவது ராகுல் காந்தியின் யாத்திரை தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே பகிரப்பட்டிருந்தது. (ராகுல் காந்தியின் யாத்திரை ஆகஸ்ட் 17, 2025 அன்று தொடங்கப்பட்டது).
ஒடிசாவின் பூரி ஜெகந்நாதர் கோவிலின் ரத யாத்திரை ஜூன் 27, 2025 அன்று நடக்கவிருப்பதாக கூறி இவ்வீடியோவானது பகிரப்பட்டிருந்தது.

தொடர்ந்து தேடுகையில் வேறு சில சமூக ஊடகப் பதிவுகளிலும் பூரி ஜெகந்நாதர் கோவிலின் ரத யாத்திரை என்று குறிப்பிட்டு வைரலாகும் இதே வீடியோவை கடந்த ஜூன் மாதத்தில் பகிர்ந்திருந்ததை காண முடிந்தது. அப்பதிவுகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
இதனையடுத்து ஆராய்கையில் அவ்வீடியோவில் பூரி ஜெகந்நாதர் கோவில் தென்படுவதை காண முடிந்தது.

பூரி ஜெகந்நாதர் கோவிலின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் கிடைத்த படம் மற்றும் கூகுள் மேப்பில் கிடைத்த படங்கள் மூலமாக இதை உறுதி செய்ய முடிந்தது.

இதன்படி பார்க்கையில் பூரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை வீடியோவே ராகுல் காந்தியின் யாத்திரை வீடியோ பரப்பப்படுகின்றது என உறுதியனானது. ஆனால் நம்மால் இவ்வீடியோ எப்போது, யாரால் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடியவில்லை.
Also Read: தவெக தலைவர் விஜய் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வாங்கிய கேரவன் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
ராகுல் காந்தியின் வாக்குரிமை அதிகார யாத்திரைக்கு கூடிய கூட்டம் என்று பரவும் வீடியோ தவறானதாகும். இவ்வீடியோவுக்கும் வாக்குரிமை அதிகார யாத்திரைக்கும் தொடர்பில்லை. பூரி ஜெகந்நாதர் கோவிலின் ரத யாத்திரை வீடியோவே இவ்வாறு பரப்பப்படுகின்றது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Instagram post bythe user, @black_ace_photographyy, dated June 9, 2025
Puri Jagannath Temple Website
Google Maps
இதே தகவல் நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் ஏற்கனவே கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது. அதை இங்கே படிக்கலாம்.
Vijayalakshmi Balasubramaniyan
November 14, 2025
Runjay Kumar
August 20, 2025
Ramkumar Kaliamurthy
August 19, 2025