இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து செய்திகள் உங்கள் பார்வைக்காக:

பக்ரைன் உணவகத்தில் ஹிஜாப் அணிந்த இளம்பெண்ணை தடுத்து நிறுத்தியவர் இந்தியரா? உண்மை என்ன?
பக்ரைன் உணவகத்தில் ஹிஜாப் அணிந்த இளம்பெண்ணை தடுத்து நிறுத்திய இந்திய மேனேஜர் என்பதாகப் பரவுகின்ற செய்தி உண்மையில்லை.

ஆனந்த விகடன் நிர்வாக இயக்குனர் குறித்து இந்தியா டுடே அட்டைப்படச் செய்தி வெளியிட்டதா?
ஆனந்த விகடன் நிர்வாக இயக்குனர் சீனிவாசன் குறித்து இந்தியா டுடே அட்டைப்படச் செய்தி வெளியிட்டதாக பரவுகின்ற புகைப்படம் போலியானதாகும்.

எரிபொருட்கள் விலையை குறைக்காவிட்டால் தீக்குளிப்பேன் என்றாரா அண்ணாமலை?
எரிபொருட்கள் விலையை குறைக்காவிட்டால் தீக்குளிப்பேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

தனி வாகனம் பயன்படுத்துவதே பெட்ரோல் விலையுயர்வுக்கு காரணம் என்றாரா நிர்மலா சீதாராமன்?
மக்கள் தனி வாகனம் பயன்படுத்துவதே பெட்ரோல் விலையுயர்வுக்கு காரணம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

பாஜகவின் அதிகாரப்பூர்வ ஊடகமானதா விகடன்?
விகடன் குழுமம் பாஜகவின் அதிகாரப்பூர்வ ஊடகமாக அறிவிக்கப்பட்டதாக கூறி பரவும் ஸ்கிரீன்ஷாட் போலியானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)