இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து செய்திகள் உங்கள் பார்வைக்காக:

அரியலூர் மாணவி மரணத்தில் பாஜகவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்தாரா திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்?
அரியலூர் மாணவி மரணத்திற்கு நீதி கேட்கும் பாஜகவின் போராட்டம் நியாயமானது என்று திமுக எம்.பி எஸ்.ஜெகத்ரட்சகன் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.

நீங்கள் தமிழர் என்றால் உங்கள் குடி என்ன என்று ராகுல் காந்தியை நோக்கி கேள்வி எழுப்பினாரா சீமான்?
நீங்கள் தமிழர் என்றால் உங்கள் குடி என்ன என்பதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ராகுல் காந்தி குறித்து கேள்வி எழுப்பியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்

2022 ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமைகளில் வரும் மாதத்தின் குறிப்பிட்ட நாட்கள் என்று பரவும் வதந்தி!
2022 ஆம் ஆண்டு, அனைத்து மாதங்களின் மாதத்தை ஒட்டிய தேதி கொண்ட நாட்கள் வெள்ளிக்கிழமைகளிலேயே வருகிறது என்பதாகப் பரவுகின்ற தகவல் தவறானதாகும்.

ஆடி மாதத்தில் தம்பதிகள் பிரிவதுபோல் அதிமுகவும் பாஜகவும் பிரிந்துள்ளது என்றாரா முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்?
ஆடி மாதத்தில் புதுமண தம்பதிகள் பிரிவதுபோல் அதிமுகவும் பாஜகவும் தற்காலிகமாக பிரிந்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

ஒரு வார்டில் தோற்றாலும் பதவியை ராஜினாமா செய்வேன் என்றாரா வானதி சீனிவாசன்?
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு வார்டில் பாஜக தோற்றாலும் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று வானதி சீனிவாசன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)