இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து செய்திகள் உங்கள் பார்வைக்காக:

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பிரதமருக்கு பதிலடி தந்ததாக பரவும் பழைய செய்தி!
பெட்ரோலுக்கான மாநில வாட் வரி விவகாரத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பிரதமர் மோடிக்கு பதிலளித்ததாக பரவும் செய்தி பழைய செய்தியாகும்.

இறைவனின் சக்தியை விட மின்சார சக்தி ஒன்றும் பெரிதல்ல என்றாரா அண்ணாமலை?
இறைவனின் சக்தியை விட மின்சார சக்தி ஒன்றும் பெரிதல்ல என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.

உலகின் தலைசிறந்த தலைவர் என்று பிரதமர் மோடிக்கு தபால் தலை வெளியிட்டுள்ளதா துருக்கி?
உலகின் தலைசிறந்த தலைவர் என்று பிரதமர் மோடிக்கு துருக்கி தபால் தலை வெளியிட்டுள்ளதாக பரவும் தகவல் தவறானதாகும்.

மும்மொழி கல்விக் கொள்கையை மறைமுகமாக அமல்படுத்தியதா தமிழக பள்ளி கல்வித்துறை?
தமிழக பள்ளி கல்வித்துறை மும்மொழி கல்விக் கொள்கையை மறைமுகமாக அமல்படுத்தியுள்ளதாக தினமலர் வெளியிட்ட செய்தி தவறானதாகும்.

இமயமலையில் 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் மகாமேரு மலர் என மீண்டும் பரவும் வதந்தி!
இமயமலையில் 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் மகாமேரு மலர் என்று பரவும் புகைப்படத்தகவல் தவறானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)