Fact Check
Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து செய்திகள் உங்கள் பார்வைக்காக:

மயிலாடுதுறை மாணவி விஜயலட்சுமி நீட் மூலமாக மருத்துவர் ஆனாரா? உண்மை என்ன?
மயிலாடுதுறையிலிருந்து மருத்துவர் ஆகியுள்ள விஜயலட்சுமி, நீட் தேர்வு மூலமாகவே மருத்துவர் ஆகியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

33 லட்சம் திருடியதில் அண்ணாமலைக்கும் தொடர்புண்டு என்று கார்த்திக் கோபிநாத் கூறினாரா?
33 லட்சம் திருடியதில் அண்ணாமலைக்கும் தொடர்புண்டு என்று கார்த்திக் கோபிநாத் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

உதயநிதி ஸ்டாலினை பெரியாருடன் ஒப்பிட்டாரா பத்திரிக்கையாளர் செந்தில் வேல்?
உதயநிதி ஸ்டாலினை பெரியாருடன் ஒப்பிட்ட பத்திரிக்கையாளர் செந்தில் வேல் என்று பரவுகின்ற செய்தி தவறானதாகும்.

‘360 டிகிரி கூமுட்டை’… வைரலாகும் படத்தின் பின்னணி என்ன?
அண்ணாமலை 360 டிகிரி கூமுட்டை என்ற எழுதப்பட்டிருந்த பெயர் பலகை முன் நிற்பதாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

சவுதி அரேபியாவை விட குஜராத்தில் பெட்ரோல் விலை குறைவு என்றாரா அண்ணாமலை?
சவுதி அரேபியாவை விட குஜராத்தில் பெட்ரோல் விலை குறைவு என்று அண்ணாமலை கூறியதாகப் பரவுகின்ற செய்தி தவறானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)