இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றாரா சீமான்?
ஜெய் பீம் விவகாரத்தில் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சீமான் கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

மதிமுக கலைக்கப்பட்டு திமுகவுடன் இணைக்கப்படும் என்றாரா வைகோ?
மதிமுக கலைக்கப்பட்டு திமுகவுடன் இணைக்கப்படும் என்று வைகோ அறிவித்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.

நாம் தமிழர் கட்சி தம்பிகள் பொங்கல் பரிசை வாங்க மாட்டார்கள் என்று சீமான் கூறினாரா?
நாம் தமிழர் கட்சி தம்பிகள் பொங்கல் பரிசை வாங்க மாட்டார்கள் என்று சீமான் கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

இந்தோனேஷியாவில் 7500 ஆண்டுகளுக்கு முந்தைய சிவாலயம் கண்டுபிடிக்கப்பட்டதா?
இந்தோனேஷியாவில் 7500 ஆண்டுகளுக்கு முந்தைய சிவாலயம் ஒன்று கண்டறியப்பட்டதாகப் பரவுகின்ற தகவல் தவறானதாகும்.

கோவை பள்ளி மாணவி தற்கொலையை பெரிது படுத்த வேண்டாம் என்று கூறினாரா வானதி சீனிவாசன்?
கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தை ஊதி பெரிதாக்கக்கூடாது என கோவை தெற்கு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வேண்டுகோள் என்று பரவும் தகவல் தவறானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)