இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

அண்ணாமலை பாஜகவினரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக வதந்தி!
அண்ணாமலை பாஜகவினரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. ஆனால் அந்த நியூஸ்கார்ட் போலியானதாகும்.

காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு அரைமணி நேரத்தில் செல்லும் அதிவேக ரயில் சில தினங்களில் தமிழகத்தில் என்று பரவும் புகைப்படத்தகவல் உண்மையா?
காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு அரைமணி நேரம், சென்னையிலிருந்து திருச்சிக்கு இரண்டே கால் மணி நேரத்தில் செல்லும் அதிவேக ரயில் தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் என்று பரவுகின்ற புகைப்படத்தகவல் ஆதாரமற்றதாகும்.

கேரள கோவில்களில் இனி உண்டியலில் பணத்திற்கு பதில் கோரிக்கைச் சீட்டு; மக்கள் முடிவு என்பதாகப் பரவும் புகைப்படத்தகவலின் உண்மை என்ன?
கேரள கோவில்களில் இனி உண்டியலில் பணம் இட மாட்டோம், கோரிக்கைச் சீட்டுதான் இடுவோம் என்று மக்கள் முடிவு செய்துவிட்டதாகப் பரவும் தகவல் தவறானதாகும்.

முதல்வர் பேருந்து ஆய்வை கிண்டலடித்து வைரலாகும் பழைய போட்டோ!
முதல்வர் பேருந்து ஆய்வை கிண்டலடித்து புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவும் படம் 2019 ஆண்டு எடுக்கப்பட்ட பழைய படமாகும்.

2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் உண்மையில் யாரிடம் மன்னிப்பு கோரினார் வினோத் ராய்? செய்தியின் முழு பின்னணி!
2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் வினோத் ராய் என்று வெளியாகியிருக்கும் தனியார் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டினை முன்வைத்து பரவுகின்ற சமூக வலைத்தள தகவல்கள் தவறான புரிதலில் பரவுகின்றன.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)