Claim: பஞ்சாபில் போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம் மூதாட்டி ஒருவர் கோபப்பட்டதாக பரவும் வீடியோ.
Fact: வைரலாகும் வீடியோவில் காணப்படும் நிகழ்வு 2022 நவம்பரில் நடந்த பழைய சம்பவமாகும்.
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் 2-ஆவது நாளாக நடந்து வரும் நிலையில், “பஞ்சாப் பொதுமக்களை பிரதிபலிக்கும் இந்த அம்மாவுக்கு பாராட்டுங்கள் பஞ்சாபில் சில விவசாயிகள் அமைப்பு காலிஸ்ஸ்தானியர்களுடன் சேர்ந்து கொண்டு திட்டமிட்டு முக்கிய சாலைகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது தேர்தல் காலம் என்பதால் எந்த அரசாங்கமும் தைரியமாக அதுவும் விவசாயிகள் போர்வையில் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க யோசிப்பார்கள் இதை பயன்படுத்திக் கொண்டு பொதுமக்களுக்கும் அரசுக்கும் பெரிய நெருக்கடி கொடுக்கவே இந்த சதி திட்டம்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

