Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
தமிழகத்தில் இரண்டு இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏலம் ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், “தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பாதுகாப்பு சட்டம் 2020 நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் உறிஞ்சும் பணிகளுக்கான ஏலத்தை தமிழக அரசின் வேண்டுகோளுக்கு இணங்க, ரத்து செய்ய ஒன்றிய அரசு பரிசீலிக்கிறதா?” என்று திமுக மக்களவைக் குழு துணைத்தலைவரும், எம்.பியுமான கனிமொழி எழுப்பியிருந்த கேள்விக்கு ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சர் ரமேஸ்வர் தெலி எழுத்துப்பூர்வமாக ஆகஸ்டு 2ஆம் தேதியன்று பதிலளித்திருக்கிறார்.
அதில் அவர், “ஒன்றிய அரசானது 2021 ஜூன் 10 -ம் தேதி, கண்டுபிடிக்கப்பட்ட சிறிய அளவிலான நிலப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் பிரித்தெடுத்தல் பணிக்காக மூன்றாவது சுற்று ஏலத்தை அறிவித்தது. இந்தியா முழுதும் 75 இடங்களில் 13 ஆயிரத்து 204 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 35 ஒப்பந்தங்களைக் கோரி இந்த ஏலம் அறிவிக்கப்பட்டது. இவற்றில் இரு பெட்ரோலிய சுரங்க குத்தகையை உள்ளடக்கிய ஒரு ஒப்பந்தம் தமிழ்நாட்டில் ராமநாதபுரம், புதுக்கோட்டை வடத்தெரு ஆகிய பகுதிகளில் அறிவிக்கப்பட்டது.
இந்த இரு பெட்ரோலிய சுரங்க குத்தகைகளும் 2007 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்டது. எண்ணெய் வயல்கள் முறைப்படுத்துதல் விரிவாக்கல் சட்டம் 1948 , பெட்ரோலிய இயற்கை எரிவாயு விதிகள் 1959 ஆகியவற்றின் கீழ் இவை வழங்கப்பட்டன. இப்போது தமிழகத்தில் எந்த ஹைட்ரோ கார்பன் பிரித்தெடுத்தல் பணியும் நடைபெறவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், “ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி. புதுக்கோட்டை கருக்காகுறிச்சி வடதெரு, ராமநாதபுரம் ஆகிய இரண்டு இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” என்று சன் நியூஸ் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் பின்னணியில் இருக்கும் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification:
தமிழகத்தில் இரண்டு இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி அளித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று பரவும் வைரல் நியூஸ்கார்டின் உண்மைத்தன்மை குறித்து அறிய அதனை ஆய்வு செய்தோம்.
முதலில், குறிப்பிட்ட செய்தி போலியானது என்பது கனிமொழி எம்.பி எழுப்பிய பதிலுக்கு அமைச்சர் ரமேஸ்வர் தெலி அளித்த பதிலில் இருந்து நமக்கு உறுதியானது. இதனை தமிழக அரசு சார்ந்த இடத்தில் இருந்து உறுதிப்படுத்திக் கொண்டோம்.
தொடர்ந்து, குறிப்பிட்ட நியூஸ் கார்டு குறித்து சன் நியூஸ் டிஜிட்டல் நிர்வாகி மனோஜிடம் கேட்டோம். அப்போது அவர், “குறிப்பிட்ட நியூஸ் கார்டு போலியாக உருவாக்கப்பட்டுள்ளது. அதிலிருப்பது நாங்கள் பயன்படுத்தும் வகையிலான எழுத்துரு கிடையாது. மேலும், அப்படி எவ்வித அறிவிப்பும் தமிழக அரசிடம் இருந்து வெளிவரவில்லை.” என்று விளக்கமளித்தார்.
Conclusion:
தமிழகத்தில் இரண்டு இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி அளித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று பரவும் நியூஸ்கார்டு போலியானது என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் எடுத்துக் காட்டியுள்ளோம்.
எனவே, வாசகர்கள் யாரும் அச்செய்தியை பகிர வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
Result: False
Our Sources:
Sun News Digital Head Manoj
Facebook: https://www.facebook.com/SunNewsTamil/?ref=page_internal
Twitter: https://twitter.com/NewIndianXpress/status/1422939133576720386
Puthiyathalaimurai: https://www.puthiyathalaimurai.com/newsview/111552/Union-minister-said–Hydro-carbon-project-is-not-going-in-agricultural-zone-in-Tamilnadu
The New Indian Express: https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/aug/04/no-hydrocarbon-extraction-taking-place-in-tamil-nadu-right-now-clarifies-centre-2340053.html
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.