Sunday, March 16, 2025
தமிழ்

Politics

Factcheck: பாஜக உத்தேச வேட்பாளர் பட்டியல் என பரவும் வதந்தி

Written By Ramkumar Kaliamurthy
Mar 10, 2021
banner_image

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் உத்தேச வேட்பாளர் பட்டியல் என கூறி பட்டியல் ஒன்று ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பாஜக உத்தேச வேட்பாளர் பட்டியல் என பரவும் பட்டியல்
Source: Twitter

வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களமே பரப்பரப்பாக உள்ளது. புதுப்புது வாக்குறுதிகள், தொகுதி பங்கீடு, எதிர்கட்சிகளின் மீது குறை சொல்தல் என தமிழகத்தின் முக்கிய கட்சிகள் அனைத்தும் மிகவும் பிசியாக உள்ளன.

தேசிய கட்சியான பாஜக, ஆளும் கட்சியான அதிமுகவிடன் கூட்டணி சேர்ந்து  20 தொகுதிகளைப் பெற்றுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது  அந்த இருபது தொகுதிகளில் யாரெல்லாம் போட்டியிடவிருக்கின்றனர் எனும் உத்தேசப் பட்டியல் ஊடகங்களில் வெளிவந்துள்ளது.

பாஜக உத்தேச வேட்பாளர் பட்டியல் என வந்த செய்தி - 1
Source: Twitter

Archive Link:https://archive.vn/3Iwcq

பாஜக உத்தேச வேட்பாளர் பட்டியல் என வந்த செய்தி - 2
Source: Twitter

Archive Link: https://archive.vn/5Oy3l

ஊடகங்களில் வெளிவந்த இந்த உத்தேச வேட்பாளர் பட்டியல் உண்மையா என்பதை அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு  செய்தோம்.

Fact Check/Verification

பாஜக வேட்பாளர்களின் உத்தேச வேட்பாளர் பட்டியல் என்று ஊடகங்களில் செய்தி வந்தததை தொடர்ந்து, இச்செய்தியின் உண்மைத்தன்மை குறித்து அறிய இதுக்குறித்து தேடினோம்.

ஊடகங்களில் வெளிவந்த உத்தேசப் பட்டியலில் பாஜக போட்டியிடவிருக்கும் 20 தொகுதிகளும், அதன் வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது.

அவ்வாறு ஊடகங்களில் வெளிவந்தப் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

 தொகுதிவேட்பாளர் பட்டியல்
1மயிலாப்பூர்கே.டி.ராகவன்.
2காரைக்குடிஎச்.ராஜா
3சேப்பாக்கம்குஷ்பு
4வேளச்சேரிடால்பின் ஸ்ரீதர்
5திருவண்ணாமலைதணிகைவேல்
6தூதுக்குடிசிவமுருக ஆதித்தன்
7அண்ணாமலைகிணத்துக்கடவு
8ஆத்தூர்பிரேம்
9காஞ்சிபுரம்கேசவன்
10சிதம்பரம்ஏழுமலை
11கோவை தெற்குவானதி சீனிவாசன்
12ராசிபுரம்எல்.முருகன்
13திருத்தணிசக்கரவர்த்தி
14பழனிகார்வேந்தன்
15ஓசூர்நரேந்திரன்
16திருவாரூர்கருப்பு முருகானந்தம்
17வேலூர்கார்த்தியாயினி
18நெல்லைநயினார் நாகேந்திரன்
19ராஜ்பாளையம்கவுதமி
20துறைமுகம்வினோஜ். ப. செல்வம்

நம் தேடலில்  தமிழக பாஜகவின் மாநில செய்தித் தொடர்பாளரான திருப்பதி நாராயணன் அவர்கள், ஊடகங்களில் வந்த உத்தேச வேட்பாளர் பட்டியல் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டதைக் காண முடிந்தது.

திருப்பதி நாராயணன் அப்பதிவில்,

“சில தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் பாஜக சட்டமன்ற வேட்பாளர்கள் குறித்த ‘போலி’ பட்டியல் வலம் வந்து கொண்டிருக்கிறது. அதிகாரபூர்வ வேட்பாளர் பட்டியல் வழக்கம் போல அகில இந்திய தலைமையால் அறிவிக்கப்படும்.”

என்று பதிவிட்டிருந்தார்.

இதேபோல் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. கார்வேந்தன் அவர்கள் பழனி தொகுதியில் போட்டியிடவிருப்பதாக இப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகவலை மறுத்து கார்வேந்தன் அவர்களும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது, ஊடகங்களில் வந்த இந்த உத்தேச வேட்பாளர் பட்டியல் போலியானது என்பது நமக்கு உறுதியாகின்றது.

Conclusion

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் உத்தேச வேட்பாளர் பட்டியல் என்று ஊடகங்களில் வந்த பட்டியல் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

News 7 Tamil: https://twitter.com/news7tamil/status/1368196676284944393

I Tamil News: https://twitter.com/ITamilTVNews/status/1368146852185473024

Narayanan Thirupahy: https://twitter.com/Narayanan3/status/1368138629663522818

S.K.Kharventhan: https://twitter.com/Narayanan3/status/1368138629663522818


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,450

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

எங்கள் வலைத்தளம் குக்கிகளை பயன்படுத்துகிறது

நாங்கள் குக்கீகளை மற்றும் ஒருவரியக் கொள்கைகளை உதவியுடன் பயன்படுத்துகிறோம், விளக்கமயமாக்க மற்றும் விளக்க பொருட்களை அளவுபடுத்த, மேலும் சிறப்பு அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம். 'சரி' என்பதை கிளிக் செய்யவும் அல்லது குக்கீ விருதங்களில் ஒரு விருப்பத்தை சோதிக்கும் மூலம், இதுவரை விளக்கப்படுத்தப்பட்டது, என ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் இதுவரை உங்கள் ஒப்புதலை அறிவிக்கின்றீர்கள், எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளது.