வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024
வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024

HomeFact Checkபெங்களூரில் மேக வெடிப்பு என்று வைரலாகும் வீடியோ உண்மையானதா?

பெங்களூரில் மேக வெடிப்பு என்று வைரலாகும் வீடியோ உண்மையானதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

பெங்களூரில் மேக வெடிப்பு என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

மேக வெடிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட பரப்பளவில் உள்ள பகுதியில் மட்டும் அளவுக்கதிமாக மழை பொழிவதாகும். இந்நிலையில் பெங்களூரில் மேக வெடிப்பு ஏற்பட்டதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பெங்களூரில் மேக வெடிப்பு என்று பரவும் தகவல் - 01
Source: Facebook

Facebook Link

பெங்களூரில் மேக வெடிப்பு என்று பரவும் தகவல் - 02

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: எலிசபெத் ராணியின் முன்னால் அமர்ந்து சாப்பிட்ட ஒரே மாமனிதர் காமராஜர்! வைரலாகும் தகவல் உண்மையானதா?

Fact Check/Verification

பெங்களூரில் மேக வெடிப்பு என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானானதைத் தொடர்ந்து, அவ்வீடியோவை ஒவ்வொரு கீ ஃபிரேம்களாக பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம். அதில் ஆஸ்திரேலியாவின் பெர்த் பகுதியில் ஏற்பட்ட புயல்காற்று என்று குறிப்பிட்டு ஆகஸ்ட் 8, 2022 அன்று ரெடிட் வெளியிட்ட பதிவு ஒன்றை எங்களால் காண முடிந்தது.

பெங்களூரில் மேக வெடிப்பு

இதனை அடிப்படையாக கொண்டு தேடியதில் தி வெதர் சேனல் Time-Lapse Shows Wrath of Severe Storm in Australia” என்று தலைப்பிட்டு வீடியோ ஒன்று வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. இவ்வீடியோவில் வானிலை ஆய்வாளர் அரி சர்சாலரி என்பவர் டைம் லாப்ஸ் வீடியோ ஒன்றின் முன் பெர்த் பகுதியில் ஏற்பட்ட புயல் குறித்து பேசிக் கொண்டிருந்தார்.

இவ்வீடியோவையும் வைரலாகும் வீடியோவையும் ஒப்பிட்டு பார்க்கையில், இரண்டும் வீடியோவும் ஒன்றுதான் என்பதை அறிய முடிந்தது.

பெங்களூரில் மேக வெடிப்பு - 01
(L-R) Screengrab of video posted on Facebook by @manipurbuytyre.tyre.5 and screengrab from video report by The Weather Channel

தி வெதர் சேனல் வெளியிட்ட வீடியோவில் ‘கேன் ஆர்ட்டி’ (Kane Artie) என்பவர் வீடியோ எடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதை அடிப்படையாக வைத்து தேடியதில் @KaneArtiePhotography எனும் பேஸ்புக் பக்கத்தில் பெர்த் விமான நிலையத்திற்கு அருகில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு பிப்ரவரி 25, 2020 அன்று வைரலாகும் வீடியோ பகிரப்பட்டிருந்ததை காண முடிந்தது.

இதனைத் தொடர்ந்து தேடியதில் 2020-இல் பெர்த்தில் ஏற்பட்ட புயல் குறித்து டெய்லி மெயில் வெளியிட்ட செய்தியிலும் வைரலாகும் பயன்படுத்தப்பட்டிருந்ததை காண முடிந்தது.

பெங்களூரில் மேக வெடிப்பு - 02
Screenshot of Daily Mail website

இதனடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் நிகழ்வு மேக வெடிப்பும் இல்லை, அது பெங்களூரில் நடக்கவும் இல்லை என்பது தெளிவாகின்றது.

Also Read: மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் சமஸ்கிருத மந்திரங்கள் ஓதப்பட்டதா?

Conclusion

பெங்களூரில் மேக வெடிப்பு என்று குறிப்பிட்டு வைரலாகும் வீடியோ தவறானது என்பதும், அவ்வீடியோ 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பெர்த் பகுதியில் ஏற்பட்ட புயலின்போது எடுக்கப்பட்டது என்பதும் நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

(இந்த செய்தியானது ஏற்கனவே நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது)

Result: False

Sources

Reddit post, Dated August 8, 2022
Report By The Weather Channel, Dated August 7, 2020
Facebook Post By @KaneArtiePhotography, Dated February 25, 2020


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular