வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024
வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024

HomeFact Checkமலேசியாவில் குடிபோதையில் பட்டிமன்றத்திற்கு சென்ற லியோனி விரட்டியடிக்கப்பட்டாரா?

மலேசியாவில் குடிபோதையில் பட்டிமன்றத்திற்கு சென்ற லியோனி விரட்டியடிக்கப்பட்டாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: மலேசியாவில் குடிபோதையில் பட்டிமன்றத்திற்கு சென்ற லியோனி விரட்டியடிப்பு
Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

‘மலேசியாவில் நடக்கவிருந்த பட்டிமன்ற கூட்டத்திற்கு வருகை தந்த திமுக நிர்வாகியும் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான திண்டுக்கல் லியோனி குடிபோதையில் கூட்டத்திற்கு வந்ததால் மலேசிய தமிழர்களால் விரட்டியடிப்பு. இது உங்கள் கட்சி கூட்டமல்ல என்று மலேசிய தமிழர்கள் காட்டம்’ என்று குறிப்பிட்டு நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.  

மலேசியாவில் குடிபோதையில் பட்டிமன்றத்திற்கு சென்ற லியோனி விரட்டியடிக்கப்பட்டதாக பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Twitter @Ramvaanavil
மலேசியாவில் குடிபோதையில் பட்டிமன்றத்திற்கு சென்ற லியோனி விரட்டியடிக்கப்பட்டதாக பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Facebook / yuvaraj.ramamurthy.54
மலேசியாவில் குடிபோதையில் பட்டிமன்றத்திற்கு சென்ற லியோனி விரட்டியடிக்கப்பட்டதாக பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Facebook / rajanila.king

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: மலப்புரத்தில் வந்தே பாரத் ரயில் மீது கல் வீசப்பட்டதாக பரவும் தவறான புகைப்படம்!

Fact Check/Verification

மலேசியாவில் குடிபோதையில் பட்டிமன்றத்திற்கு சென்ற லியோனி விரட்டியடிக்கப்பட்டதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

வைரலாகும் நியூஸ்கார்டானது நியூஸ் 7 தமிழின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி பரப்பப்படுவதால், அந்நிறுவனம் இவ்வாறு நியூஸ்கார்டை வெளியிட்டதா என தேடினோம். இத்தேடலில் அண்மையில் இவ்வாறு நியூஸ்கார்டை வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.

தொடர்ந்து தேடியதில் கடந்த 2022 ஆம் ஆண்டு மே 17 அன்று, “அரசு பள்ளிகளுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது; ஆனால் பள்ளி மாணவ, மாணவிகள் சண்டை என்று திட்டமிட்டு பொய்யான வீடியோக்கள் பரப்பப்பட்டு வருகின்றன” என்று ஐ.லியோனி பேசியதாக நியூஸ் 7 தமிழ் நியூஸ்கார்ட் ஒன்றை வெளியிட்டிருந்தை காண முடிந்தது

அந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே மேற்கண்ட போலி நியூஸ்கார்ட் உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்த நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

இதனையடுத்து நியூஸ் 7 தமிழின் டிஜிட்டல் தலைவர் சுகிதா சாரங்கராஜை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட குறித்து விசாரித்ததில், அவரும் அந்த நியூஸ்கார்ட் போலியானது என்பதை உறுதி செய்தார்.

இதனைத் தொடர்ந்து நியூஸ் 7 தமிழின் சமூக ஊடகப் பக்கங்களிலும் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்று தெரிவிக்கப்பட்டது.

வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்று உறுதியாகிய நிலையில் லியோனி மலேசிய தமிழர்களால் விரட்டியடிக்கப்பட்டாரா என்பது குறித்து தேடினோம். இதில் நிகழ்ச்சிக்கு காலதாமதாக சென்ற லியோனியிடம் மலேசிய தமிழர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல் ஒன்று நமக்கு கிடைத்தது. ஆனால் லியோனி மதுபோதையில் இருந்ததாக இச்செய்தியில் எங்கும் குறிப்பிட்டிருக்கவில்லை.

இந்நிகழ்வு குறித்து மேலும் சில ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தது. அவற்றை இங்கே, மற்றும் இங்கே காணலாம்.

Also Read: Fact Check: பாகிஸ்தானில் இறந்த மகள்கள் சமாதிக்கு பூட்டு போடும் பெற்றோர் எனப் பரவும் புகைப்படம் உண்மையா?

Conclusion

மலேசியாவில் குடிபோதையில் பட்டிமன்றத்திற்கு சென்ற லியோனி விரட்டியடிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
Facebook post, from News 7 Tamil, Dated May 07, 2022
Facebook post, from News 7 Tamil, Dated May 04, 2023
Phone Conversation Sugitha Sarangaraj, Digital Head, News 7 Tamil, Dated May 04, 2023
Report from News Tamil 24X7, Dated Dated May 03, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular