ஆவின் இனிப்புகளில் நெய்க்கு பதிலாக வனஸ்பதி பயன்படுத்தப்படுவதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆவினில் பால் கொள்முதல் பாதிக்கப்பட்டதால், நெய், கோவா மற்றும் வெண்ணெய் உற்பத்தி குறைந்துள்ளது. எனவே, நெய்க்கு பதிலாக வனஸ்பதி எனப்படும், டால்டாவை பயன்படுத்தி, ஆவின் இனிப்பு வகைகள் தயாரிக்கப்படுவதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

இச்செய்தியை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தீபாவளிக்கு ₹600 கோடி மது விற்க இலக்கு வைக்கப்பட்டுள்ளதா?
Fact Check/Verification
ஆவின் இனிப்புகளில் நெய்க்கு பதிலாக வனஸ்பதி பயன்படுத்தப்படுவதாக தினமலர் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
அதில், “ஆவின் இனிப்புகள் அனைத்தும் அக்மார்க் தரம்பெற்ற ஆவின் நெய்யினால் சுகாதாரமான முறையில் எவ்வித வேதி பொருட்களும் சேர்க்கப்படாமல் தயாரிக்கப்பட்டு நவீன தொழில்நுட்பமுறையில் பேக் செய்து விற்பனை செய்யப்படுகிறது” என்று தினமலர் வெளியிட்ட இச்செய்திக்கு மறுப்பு தெரிவித்து ஆவின் டிவீட் செய்திருந்ததை காண முடிந்தது.
தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறையும், ஆவின் இனிப்புகள் அனைத்தும் அக்மார்க் தரம்பெற்ற ஆவின் நெய்யினால் தயாரிக்கப்படுபவை. தினமலரில் வந்த இச்செய்தி உண்மைக்கு புறம்பானது என்று தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தேடியதில், தினமலரில் வந்த இச்செய்திய மறுத்து தமிழக அரசு சார்பில் வெளியிட்ட செய்தி அறிக்கை ஒன்றை காண முடிந்தது.
அந்த அறிக்கையில்,
ஆவின் 40 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகின்றது. இந்த ஆண்டு ஆயூத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பு இனிப்பு வகைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த இனிப்புகள் இனிப்புகள் அனைத்தும் அக்மார்க் தரம்பெற்ற ஆவின் நெய்யினால் சுகாதாரமான முறையில் எவ்வித வேதி பொருட்களும் சேர்க்கப்படாமல் தயாரிக்கப்பட்டு நவீன தொழில்நுட்பமுறையில் பேக் செய்து விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் நெய்க்கு பதிலாக வனஸ்பதி எனப்படும் டால்டாவை பயன்படுத்தி ஆவின் இனிப்புகள் தயாரிக்கப்படுவதாக ஒரு நாளிதழில் 17.10.2022 அன்று வெளியாகியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது மற்றும் ஆவின் நற்பெயருக்கு களங்கள் ஏற்படுத்தும் வகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற உண்மைக்கு புறம்பான உள்நோக்கமுடைய அவதூறுகளை ஆவின் நிர்வாகம் சட்ட ரீதியாக எதிர்கொள்ளும்.
என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Conclusion
ஆவின் இனிப்புகளில் நெய்க்கு பதிலாக வனஸ்பதி பயன்படுத்தப்படுவதாக தினமலர் வெளியிட்ட செய்தி தவறாது என்று நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Sources
Press Release, from Tamilnadu Department of Information and Public Relations (DIPR) on October 18, 2022
Tweet, from Tamilnadu Department of Information and Public Relations (DIPR) on October 18, 2022
Tweet, from Avin on October 17, 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)