இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள் உங்கள் பார்வைக்கு

100 வருட கோயிலை இடித்தேன் என்று பெருமை பேசியதாக டி.ஆர் பாலு குறித்து தவறான செய்தி பரப்பும் அண்ணாமலை!
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு 100 வருட கோயிலை இடித்தேன் என்று பெருமை பேசியதாக பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் பரப்பிய வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்.

விசிக பொறுப்பாளர்களைத் தேடும் திருவண்ணாமலை காவல்துறை என்று வெளியான போலி அறிவிப்பு!
விசிக பொறுப்பாளர்களைத் தேடும் திருவண்ணாமலை காவல்துறை என்று வெளியாகிய அறிவிப்பு புகைப்படம் போலியானதாகும்.

நடிகர் ரன்பீர் கபூர் ஆத்திரத்தில் ரசிகரின் செல்போனை தூக்கி எறிந்தாரா? உண்மை என்ன?
நடிகர் ரன்பீர் கபூர் செல்பி எடுத்த ரசிகரின் செல்போனை ஆத்திரத்துடன் தூக்கி வீசியதாகப் பரவுகின்ற வீடியோ OPPO விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டதாகும்.

திமுக அரசு அதிக வரி விதிப்பதாக பாட்டி ஒருவர் பேசியதாக பழைய வீடியோவை வெளியிட்ட அதிமுக கோவை சத்யன்!
திமுக அரசு அதிக வரி விதிப்பதாக பாட்டி ஒருவர் பேசியதாக வைரலாகும் வீடியோ மூன்று வருடங்களுக்கு முந்திய பழைய வீடியோவாகும்.

உ.பி.யில் தலித் பெண் ஆற்றில் குளித்ததால் பாஜகவினர் அவரை தாக்கினரா?
உ.பி.யில் தலித் பெண் ஆற்றில் குளித்ததால், ஆற்றில் தீட்டுப்பட்டுவிட்டது என்று கூறி பாஜகவினர் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சார்ந்தவர்கள் அவரை தாக்கியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)