சீமானுக்கும் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளிக்கும் தொடர்பு உள்ளதாக கூறி, வாட்ஸ்ஆப் குரூப் ஒன்றின் ஸ்க்ரீன் ஷாட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

சென்னை கே கே நகர் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ராஜகோபாலன் எனும் ஆசிரியர் பல ஆண்டுகளாக அவரிடம் படிக்கும் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுக்குறித்து மாணவி ஒருவர் புகார் கொடுக்க, ராஜகோபாலன் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து ஊடகங்களில் செய்தி வந்தப்பின் ராஜகோபாலன் குறித்தும், அவர் பணியாற்றி வந்த பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி குறித்தும் பல அடுக்கடுக்கான புகார்கள் செய்தி ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கும் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளிக்கும் தொடர்பு உள்ளதாக கூறி கூறி வாட்ஸ்ஆப் குரூப் ஒன்றின் ஸ்க்ரீன் ஷாட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Archive Link: https://archive.ph/oHPsE

Archive Link: https://archive.ph/0Q50k

Archive Link: https://archive.ph/tCprL
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
சீமானுக்கும் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளிக்கும் தொடர்பு உள்ளதாக கூறி வாட்ஸ்ஆப் குரூப் ஒன்றின் ஸ்க்ரீன் ஷாட் வைரலானதைத் தொடர்ந்து, வைரலாகும் ஸ்க்ரீன் ஷாட்டை ஆய்வு செய்தோம். இதில் இந்த ஸ்கிரீன்ஷாட் போலியான ஒன்று என்று நமக்கு தெரிய வந்தது.
பொதுவாக வாட்ஸ்ஆப் குரூப்பில், ஒரு நபர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறை தொடர்ந்து செய்தி அனுப்பும்போது அந்த நபரின் பெயர் முதல் செய்தியில் மட்டுமே தெரியும். அடுத்தடுத்து வரும் அவரின் செய்தியில் அவரின் பெயர் இடம்பெறாது. ஆனால் வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட்டில் பாரதி மேம் (Bharathi Mam) என்பவர் தொடர்ந்து அனுப்பிய இரண்டு செய்திகளிலும் அவரின் பெயர் இடம்பெற்றுள்ளது.

அடுத்ததாக இந்த ஸ்க்ரீன்ஷாட்டில் புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் ஒன்று பகிரப்பட்டுள்ளது. வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட்படி பார்த்தால், அந்த நியூஸ்கார்ட் பகிரப்பட்ட நேரம் மாலை 03:29 (15:29) அல்லது அதற்கு முன்.

ஆனால் உண்மையில் அந்த நியூஸ்கார்டானது மாலை 04:12 (16:12) க்குதான் புதிய தலைமுறையின் சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிரப்பட்டுள்ளது. அப்படி இருக்க, ஏறக்குறைய 42 நிமிடங்களுக்கு முன்பே எவ்வாறு இந்த நியூஸ்கார்ட் வாட்ஸ்ஆப் குரூப்பில் பகிரப்பட்டிருக்க முடியும்?

மேற்கிடைத்த ஆதாரங்களின்படி நமக்கு தெளிவாகுவது என்னவென்றால், சீமானுக்கும் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளிக்கும் தொடர்பு உள்ளதாக பரவும் ஸ்கிரீன்ஷாட் பொய்யானதாகும்.
Conclusion
சமூக வலைத்தளங்களில் சீமானுக்கும் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளிக்கும் தொடர்பு உள்ளதாக கூறி பரவும் வாட்ஸ்ஆப் குரூப் ஸ்க்ரீன் பொய்யானது என உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Puthiya Thalaimurai: https://www.facebook.com/PutiyaTalaimuraimagazine/posts/2208807115942851
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)