வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact CheckWeekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்குப் பின் அமைக்கப்பட்ட சாலையின் நிலை என்று கிண்டலுக்கு உள்ளாகும் தவறான புகைப்படத் தகவல்!

தமிழ்நாட்டில் திமுக அரசின் புதிய திட்டம் என்பதாக கார் ஒன்று சாலையில் ஏற்பட்டுள்ள குழிக்குள் மாட்டிக் கொண்டிருப்பது போன்ற புகைப்படத்துடன் கூடிய தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. அது தவறான தகவலாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

டாடா குழுமம் 150வது ஆண்டு விழாவிற்காக கார் பரிசளிப்பதாக பரவும் வதந்தி!

டாடா குழுமம் 150வது ஆண்டினை நிறைவு செய்வதை ஒட்டி இந்த லிங்கைக் கிளிக் செய்து கார் வெல்லுங்கள் என்பதாகப் பரவும் குறுஞ்செய்தி போலியானதாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

பெண்களுக்காக 9969777888 எனும் உதவி எண்ணை தமிழக காவல்துறை அறிவித்துள்ளதா?

தனியாக பயணம் செய்யும் பெண்களுக்காக 9969777888 எனும் உதவி எண்ணை தமிழக காவல்துறை அறிவித்துள்ளதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இத்தகவல் முற்றிலும் பொய்யாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

எச்.ராஜா எனக்கு தந்தை போன்றவர் என்று சீமான் கூறியதாக வதந்தி!

எச்.ராஜா எனக்கு தந்தை போன்றவர் என்று சீமான் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது. இத்தகவல் முற்றிலும் பொய்யாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

திருமாவளவனை பிண அரசியல் நடத்துபவர் என்றாரா முதல்வர் ஸ்டாலின்?

விசிக தலைவர் திருமாவளவனை பிண அரசியல் நடத்துபவர் என்று முதல்வர் ஸ்டாலின் டிவீட் செய்ததாக பரவும் புகைப்படம் போலியானதாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

Most Popular