வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Checkபீகாரில் பாஜகவினர் பெட்ரோல், கேஸ் விலையுயர்வை ஆதரித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதாக வதந்தி!

பீகாரில் பாஜகவினர் பெட்ரோல், கேஸ் விலையுயர்வை ஆதரித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதாக வதந்தி!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

பீகாரில் பாஜகவினர் பெட்ரோல், கேஸ் விலையுயர்வை ஆதரித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பீகாரில் பாஜகவினர் பெட்ரோல், கேஸ் விலையுயர்வை ஆதரித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் - 1

பீகாரில் பெட்ரோல், கேஸ் விலை உயர்வை ஆதரித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும், விலையுயர்வை விரும்பாதவர்கள் பாகிஸ்தான் செல்லுங்கள் என்று அவர்கள் கோஷமிட்டதாகவும் கூறி நியூஸ் 7 தமிழின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இந்த நியூஸ்கார்டை பலரும் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

பீகாரில் பாஜகவினர் பெட்ரோல், கேஸ் விலையுயர்வை ஆதரித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் - 2

Twitter Link | Archive Link

பீகாரில் பாஜகவினர் பெட்ரோல், கேஸ் விலையுயர்வை ஆதரித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் - 3

Facebook Link

பீகாரில் பாஜகவினர் பெட்ரோல், கேஸ் விலையுயர்வை ஆதரித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் - 4

Facebook Link

Also Read: பிரதமர் மோடி வாடிகனில் வாடகை காரில் பயணம் செய்ததாக வதந்தி!

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact check/ Verification

பீகாரில் பாஜகவினர் பெட்ரோல், கேஸ் விலையுயர்வை ஆதரித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதாக வைரலாகும் நியூஸ்கார்டில் பயன்படுத்தப்பட்டிருக்கும் எழுத்துரு (Font) நியூஸ் 7 தமிழில் வழக்கமாக நியூஸ்கார்டில் பயன்படுத்தும் எழுத்துருவிலிருந்து வேறுபட்டிருப்பதை நம்மால் உணர முடிந்தது.

இருப்பினும் பலர் இந்த நியூஸ்கார்டை உண்மை என்று நம்பி பகிர்ந்து வருவதால், இந்த நியூஸ்கார்டை நியூஸ் 7 தமிழ் பிரசுரித்ததா என்பதை உறுதி செய்ய, அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து தேடினோம்.

இந்த தேடலில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை நியூஸ் 7 தமிழ் பிரசுரித்ததற்கான எந்த ஒரு தரவும் நமக்கு கிடைக்கவில்லை. இதனையடுத்து நியூஸ் 7 தமிழின் டிஜிட்டல் தலைவர் சுகிதா சாரங்கராஜ் அவர்களைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்துக் கேட்டோம்.

இதற்கு அவர்கள்,

“இது போலியான நியூஸ்கார்ட், இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை நாங்கள் பிரசுரிக்கவில்லை.”

என்று விளக்கமளித்தனர்

Also Read: புனித் ராஜ்குமார் மயங்கி விழுந்த கடைசி நிமிட சிசிடிவி காட்சி என்று பரவும் தவறான வீடியோ!

Conclusion

பீகாரில் பாஜகவினர் பெட்ரோல், கேஸ் விலையுயர்வை ஆதரித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதாக சமூக வலைத்தளங்களில்  வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Ms. Sugitha Sarangaraj, Digital Head, News 7 Tamil

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular