வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Checkமுதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா என்று பரவும் வதந்தி!

முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா என்று பரவும் வதந்தி!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக பரவும் தகவல்

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டு, சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தந்தி தொலைக்காட்சியின் டெம்ப்ளேட்டில் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இந்த நியூஸ்கார்டை பலரும் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்தினை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக பரவும் தகவல் - 1

Facebook Link

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக பரவும் தகவல் - 2

Facebook Link

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக பரவும் தகவல் - 3

Facebook Link

Also Read: ‘ஆசிரியர்களுக்கு தொகுப்பு ஊதியம் வழங்கப்பட மாட்டாது’ என்றாரா அன்பில் மகேஷ்?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact check/ Verification

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா என்று வைரலாகும் நியூஸ்கார்டில் ‘கொரோனா’ என்பதற்கு பதிலாக ‘கொரனா’ என்று எழுத்துப்பிழையுடன் எழுதப்பட்டிருந்தது. தந்தி தொலைக்காட்சியில் வழக்கமாக பயன்படுத்தப்படும் எழுத்துறு (Font), டிசைன் போன்றவை இதில் காணப்படவில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக தமிழக முதல்வர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அவ்விஷயமானது உள்ளூர் ஊடகங்களிலிருந்து தேசிய ஊடகங்கள் வரை மிகப்பெரிய செய்தியாக மாறி இருக்கும். ஆனால் இவ்வாறு ஒரு செய்தி எந்த ஒரு ஊடகத்திலும் வந்திருக்கவில்லை.

இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போதே வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதுதான் என்பதை யூகிக்க முடிந்தது. இருப்பினும் இத்தகவலை பலர் உண்மை என்று நம்பி பகிர்ந்து வருவதால் இதை முழுமையாக ஆய்வு செய்து விளக்க முடிவு செய்தோம்.  

தந்தி தொலைக்காட்சியில் நேற்று (21/01/2022) வெளியிடப்பட்டதாக பரப்பப்படும் இந்த நியூஸ்கார்டை தந்தி தொலைக்காட்சி வெளியிட்டுள்ளதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இந்த தேடலில் தந்தி தொலைக்காட்சி இவ்வாறு  நியூஸ்கார்டை வெளியிட்டதற்கான எந்த ஒரு தரவும் கிடைக்கவில்லை. மாறாக வைரலாகும் இந்த நியூஸ்கார்ட் பொய்யானது என்று தந்தி தொலைக்காட்சி தரப்பில் வெளியிடப்பட்டிருந்த பதிவையே காண முடிந்தது.

Archive Link

இதனையடுத்து தமிழக முதல்வர் நலமாக உள்ளார், சாலை விபத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு காப்பாற்றப்பட்ட சிறுவன் வர்ஷாந்துடன் அலைபேசி வாயிலாக இன்று காலை பேசியுள்ளார் என்பது முதல்வரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்த பதிவு மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது.

Archive Link

Also Read: தமிழக அலங்கார ஊர்தியில் கருணாநிதி சிலை இடம்பெற்றதால் நிராகரிக்கப்பட்டதா?

Conclusion

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா என்று  பரப்பப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Fabricated

Our Sources

Thanthi Tv

CMO Tamilnadu


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular