வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Checkசேலம் – சென்னை விரைவு சாலை முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் அமைக்கப்படவுள்ளது என்றாரா தமிழ் கேள்வி...

சேலம் – சென்னை விரைவு சாலை முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் அமைக்கப்படவுள்ளது என்றாரா தமிழ் கேள்வி செந்தில்வேல்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் சேலம் – சென்னை விரைவு சாலை அமைக்கப்படவுள்ளது என்று ஊடகவியலாளர் செந்தில் வேல் டிவீட் செய்ததாக ஸ்கிரீன்ஷாட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் சேலம் – சென்னை விரைவு சாலை அமைக்கப்படவுள்ளது என்று ஊடகவியலாளர் செந்தில்வேல் டிவீட் செய்ததாக வைரலாகும் ஸ்கிரீன்ஷாட்

பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் சேலம் – சென்னைக்கிடையே புதிய விரைவு சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டு வருகின்றது. இதற்கான ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடைப்பெற்றது.

இத்திட்டத்தில் தமிழக அரசின்  நிலைப்பாடு குறித்து முடிவு அறிவிக்காத  நிலையில், இத்திட்டத்தை தமிழக அரசு ஆதரிப்பதாக கூறி ஊடகவியலாளர் செந்தில் வேல் அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டதாக ஸ்க்ரீன்ஷாட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

வைரலாகும் அந்த ஸ்கிரீன்ஷாட்டில், “சூப்பர் பாஸ்ட் முதல்வர் ஆட்சியில் மீண்டும் ஒரு மைல் கல் சாதனை.. மாங்கனி நகரமான சேலத்தில் இருந்து-தலைநகர் சென்னைக்கு 3மணி நேரத்தில் பயணம் செய்ய விரைவு சாலை அமைக்கப்படுவதன் மூலம் நேர விரயம்,பணிகளுக்கு தாமதமாக செல்வது போன்ற இடையூறுகள்,பயண சோர்வு மக்களுக்கு இனி இருக்காது.”என்று செந்தில்வேல் பதிவிட்டுள்ளதாக உள்ளது.

இந்த ஸ்க்ரீன்ஷாட்டை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் சேலம் – சென்னை விரைவு சாலை அமைக்கப்படவுள்ளது என்று ஊடகவியலாளர் செந்தில்வேல் டிவீட் செய்ததாக வைரலாகும் ஸ்கிரீன்ஷாட் - 1

Twitter Link | Archive Link

முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் சேலம் – சென்னை விரைவு சாலை அமைக்கப்படவுள்ளது என்று ஊடகவியலாளர் செந்தில்வேல் டிவீட் செய்ததாக வைரலாகும் ஸ்கிரீன்ஷாட் -

Facebook Link

முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் சேலம் – சென்னை விரைவு சாலை அமைக்கப்படவுள்ளது என்று ஊடகவியலாளர் செந்தில்வேல் டிவீட் செய்ததாக வைரலாகும் ஸ்கிரீன்ஷாட் - 3

Facebook Link

Also Read: உபி தேர்தலில் ஓட்டுப் போடாமல் இருக்க வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததா பாஜக?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

சேலம் – சென்னை விரைவு சாலை முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் அமைக்கப்படவுள்ளது என்று ஊடகவியலாளர் செந்தில் வேல் டிவீட் செய்ததாகக் கூறி வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட்டின் உண்மைத்தன்மை குறித்து அறிய டிவிட்டர் அட்வான்ஸ்ட் சர்ச் (Twitter Advanced Search) முறையை பயன்படுத்தி வைரலாகும் டிவீட் குறித்து தேடினோம்.

இவ்வாறு தேடியதில் செந்தில் வேல் அவர்களின் டிவீட் என்று வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட்டின் பின்புலத்தில் இருந்த உண்மைத்தன்மை நமக்கு தெளிவாகியது.

உண்மையில் செந்தில்வேல் பதிவிட்டதாக வைரலாகும் டிவீட், செந்தில்வேல் அவர்களால் பதிவிட்டதே அல்ல; அது செந்தில் வேல் பெயரில் இயங்கும் போலிக் கணக்கிலிருந்து பதிவிட்டதாகும்.

Archive Link

செந்தில்வேல் அவர்களின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கின் ஐடி @Senthilvel79 என்பதாகும். ஆனால் வைரலாகும் டிவீட் @Senthillvel79 (இதில் ஒரு ‘l’ கூடுதலாக உள்ளது) என்கிற ஐடியிலிருந்து பதிவிடப்பட்டுள்ளது. மேலும் அந்த ஐடியிலேயே அது Sarcasm (போலிக் கணக்கு) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

வாசகர்களின் புரிதலுக்காக செந்தில்வேல் அவர்களின் உண்மையான டிவிட்டர் கணக்கையும், அவர் பெயரில் இயங்கும் போலி கணக்கையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

Also Read: RSS தலைவர் மோகன் பகவத்துடன் ஓவைசி இருப்பதாக பரவும் படம் உண்மையானதா?

Conclusion

சேலம் – சென்னை விரைவு சாலை முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் அமைக்கப்படவுள்ளது ஊடகவியலாளர் செந்தில் வேல் டிவீட் செய்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் ஸ்க்ரீன்ஷாட் உண்மையில் அவர் பெயரில் இயங்கும் போலிக் கணக்கில் பதிவிடப்பட்டது என்பதை கிடைத்த ஆதாரங்களின் மூலம் தெளிவாகின்றது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Twitter Advanced Search


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular