வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Checkஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வருகையையொட்டி குடிசைப் பகுதிகள் மறைக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படமா இது?

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வருகையையொட்டி குடிசைப் பகுதிகள் மறைக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படமா இது?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வருகையையொட்டி குடிசைப் பகுதிகள் மறைக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படம் என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வருகையையொட்டி குடிசைப் பகுதிகள் மறைக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படம் என்று வைரலாகும் புகைப்படம்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இவர் வருகையையொட்டி குஜராத்தின் குடிசைப்பகுதிகள் துணியிட்டு மறைக்கப்பட்டதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வருகையையொட்டி குடிசைப் பகுதிகள் மறைக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படம் என்று வைரலாகும் புகைப்படம் - 1

Twitter Link | Archive Link

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வருகையையொட்டி குடிசைப் பகுதிகள் மறைக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படம் என்று வைரலாகும் புகைப்படம் - 2

Facebook Link

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வருகையையொட்டி குடிசைப் பகுதிகள் மறைக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படம் என்று வைரலாகும் புகைப்படம் - 3

Facebook Link


Also Read:
இலங்கையை இந்தியாவின் மாநிலமாக்குவோம் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினாரா?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வருகையையொட்டி குடிசைப் பகுதிகள் மறைக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படம் என்று கூறி புகைப்படம் வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

முன்னதாக போரிஸ் ஜான்சன் வருகையையொட்டி குஜராத்தில் குடிசைப்பகுதிகள் துணியிட்டு மறைக்கப்பட்ட தகவல் உண்மைதானா என்பது குறித்து தேடினோம். இத்தேடலில் இத்தகவல் உண்மையானதுதான் என்பதை அறிய முடிந்தது.

ஆனால் வைரலாகும் படம் இந்நிகழ்வில் எடுக்கப்பட்டதுதானா என்பதை உறுதி செய்ய அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அதில் வைரலாகும் படம் தற்போது எடுக்கப்பட்டதல்ல, ஒரு வருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட பழைய படம் என்பதை அறிய முடிந்தது.

Archive Link

அகமதாபாத்தில் இருக்கும் சபர்மதி ஆசிரமத்திற்கு போகும் வழியில் இருக்கும் குடிசைப் பகுதிகளை கடந்த வருடம் மார்ச் மாதத்தில் துணியிட்டு மறைத்தது குஜராத் அரசு. இத்தருணத்தில் எடுக்கப்பட்ட படத்தையே தற்போதைய நிகழ்வுடன் தொடர்புப்படுத்தி சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

Also Read: சுதந்திர இந்தியாவின் முதல் இப்தார் விருந்து என்று பரவும் புகைப்படம் உண்மையானதா?

Conclusion

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வருகையையொட்டி குடிசைப் பகுதிகள் மறைக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படம் என்று கூறி வைரலாகும் புகைப்படம் ஒரு வருடத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட பழைய படம் என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் மூலம் தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Source

Ahmedabad Mirror


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular