வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Checkசீனாவில் தயாரிக்கப்பட்ட ரோபோக்கள் பரத நாட்டியம் ஆடியதாக பரவும் பொய் தகவல்!

சீனாவில் தயாரிக்கப்பட்ட ரோபோக்கள் பரத நாட்டியம் ஆடியதாக பரவும் பொய் தகவல்!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: சீனாவில் தயாரிக்கப்பட்ட ரோபோக்கள் பரத நாட்டியம் ஆடியது
Fact: வைரலாகும் வீடியோவில் காணப்படுபவர்கள் உண்மையான பரதநாட்டிய கலைஞர்களாவர்

“இந்த நடனத்தை கவனமாக பாருங்கள். ஷாங்காயில் உள்ள டிஸ்னிலேண்டில் நடனம் ஆடப்படுகிறது. இவர்கள் இருவரும் மனித நடனக் கலைஞர்கள் அல்ல, சீனாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு ரோபோக்கள் நடனத்தின் காலம் ஐந்து நிமிடங்கள் மட்டுமே. ஆனால் இந்த நடனத்தைப் பார்க்க டிக்கெட் வாங்க காத்திருக்கும் நேரம் 4 மணி நேரம். இந்த நடனத்தைப் பார்ப்பதற்கான டிக்கெட் விலை 499 யுவான், இது 75 டால்க்சர்களுக்குச் சமம். ரோபோக்களின் முகபாவங்கள் கச்சிதமாக உள்ளன, அவற்றை உண்மையான மனிதர்களிடமிருந்து வேறுபடுத்துவது கடினம்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

சீனாவில் தயாரிக்கப்பட்ட ரோபோக்கள் பரத நாட்டியம் ஆடியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்
Screengrab from Twitter@lakshman241082
சீனாவில் தயாரிக்கப்பட்ட ரோபோக்கள் பரத நாட்டியம் ஆடியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்
Screengrab from Facebook/ramakrishnan6002
சீனாவில் தயாரிக்கப்பட்ட ரோபோக்கள் பரத நாட்டியம் ஆடியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்
Screengrab from Facebook/Gayatri Thanjavur

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: Fact Check: அதானி மனைவியை தலைகுனிந்து வணங்கினாரா பிரதமர் மோடி?

Factcheck / Verification

சீனாவில் தயாரிக்கப்பட்ட ரோபோக்கள் பரத நாட்டியம் ஆடியது என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, இதுக்குறித்த உண்மையை அறிய, அவ்வீடியோவை ஒவ்வொரு கீ ஃபிரேம்களாக பிரித்து, ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடலை தொடங்கினோம்.

இத்தேடலில் இந்தியன் ராகா எனும் யூடியூப் பக்கத்தில் ‘Vahana Alarippu: Bharatanatyam Dance | Best of Indian Classical Dance’ எனும் தலைப்பிட்டு வைரலாகும் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதை காண முடிந்தது. இந்த வீடியோவின் டிஸ்கிரிப்ஷனில் சோஃபியா சாலிங்கரோஸ், இஷா பருப்படி ஆகிய இரண்டு நடனக் கலைஞர்கள் இந்த நடனததை ஆடியதாக  குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை அடிப்படையாக வைத்து தேடியதில் சோஃபியா மற்றும் இஷாவின் பல வீடியோக்களை கண்டறிய முடிந்தது.

கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் காண்கையில், வைரலாகும் வீடியோவில் காணப்படுபவர்கள் ரோபோக்கள் அல்ல, உண்மையான பரத நாட்டியக் கலைஞர்கள் என்பது தெளிவாகின்றது.

Also Read: வாழும் காமராஜர் அண்ணாமலை என்று சிறுவன் ஒருவர் பதாகை பிடித்ததாகப் பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம்!

Conclusion

சீனாவில் தயாரிக்கப்பட்ட ரோபோக்கள் பரத நாட்டியம் ஆடியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
YouTube video from IndianRaga, Dated August 11, 2017

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular