வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Checkபாஜக நிர்வாகி செல்வக்குமார் எழுதி கொடுத்ததையே பதிவிட்டேன் என்றாரா உமா கார்கி?

பாஜக நிர்வாகி செல்வக்குமார் எழுதி கொடுத்ததையே பதிவிட்டேன் என்றாரா உமா கார்கி?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: பாஜக நிர்வாகி செல்வக்குமார் எழுதி கொடுத்ததையே பதிவிட்டேன் – உமா கார்கி

Fact:வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

தமிழக முதலைமைச்சர் மற்றும் அரசை குறித்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து  அவதூறு பரப்பி வந்த பாஜக ஆதரவாளர் உமா கார்கி என்பவரை கடந்த செவ்வாயன்று (20/06/2023) போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் டிவிட்டரில் உமார் கார்கி பதிவு செய்த அனைத்து பதிவுகளும் பாஜக தொழிற்பிரிவு துணைத்தலைவர் செல்வக்குமார் என்பவர் எழுதி கொடுத்தவை என்றும், சுயமாக அவர் எழுதவில்லை என்றும் போலீஸ் விசாரணையில் அவர் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பாஜக நிர்வாகி செல்வக்குமார் எழுதி கொடுத்ததையே பதிவிட்டேன் உமா கார்கி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Twitter@Devar_Army

Twitter Link | Archived Link

பாஜக நிர்வாகி செல்வக்குமார் எழுதி கொடுத்ததையே பதிவிட்டேன் உமா கார்கி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Facebook/வடவள்ளி பகுதி கழக திமுக

Facebook Link

பாஜக நிர்வாகி செல்வக்குமார் எழுதி கொடுத்ததையே பதிவிட்டேன் உமா கார்கி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Facebook/abuashraf.ashraf.566

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: சென்னை விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக தவறான செய்தி வெளியிட்ட ஊடகங்கள்!

Fact Check/Verification

பாஜக நிர்வாகி செல்வக்குமார் எழுதி கொடுத்ததையே பதிவிட்டேன் உமா கார்கி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.

வைரலாகும் நியூஸ்கார்டில் பயன்படுத்தப்பட்டிருக்கும் எழுத்துரு, டிசைன் போன்றவை வழக்கமாக தந்தி தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் எழுத்துரு, டிசைனிலிருந்து மாறுபட்டிருப்பதை காண முடிந்தது. அதேபோல் தந்தி தொலைக்காட்சியின் லோகோ வழக்கமாக வலது மேற்புறத்திலே காணப்படும். ஆனால் வைரலாகும் கார்டில் அது வலது நடுவில் இருந்தது. இதையெல்லாம் வைத்து பார்க்கையிலேயே வைரலாகும் நியூஸ்கார்டு போலியானதுதான் என்பதை அறிய முடிந்தது.

பாஜக நிர்வாகி செல்வக்குமார் எழுதி கொடுத்ததையே பதிவிட்டேன் உமா கார்கி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்

இருப்பினும் பலர்  இந்த நியூஸ்கார்டை உண்மை என்று நம்பி பகிர்ந்து வருவதால் இதுக்குறித்து முழுமையாக ஆய்வு செய்து தெளிவுப்படுத்த விரும்பினோம்.    

வைரலாகும் நியூஸ்கார்டானது தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை அந்நிறுவனம் வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் பொறுப்பாளரான வினோத்குமாரை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்டு குறித்து விசாரித்தோம். அவர் இந்த நியூஸ்கார்டு போலியானது, இந்த கார்டை தந்தி தொலைக்காட்சி வெளியிடவில்லை என உறுதி செய்தார்.

இதனையடுத்து பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி சூர்யவை தொடர்புக் கொண்டு பேசுகையில், இத்தகவல் பொய்யானது என்று தெளிவுப்படுத்தினார். பாஜக சமூக ஊடக அணித் தலைவர் எம்.எஸ்.பாலாஜியும் இந்த தகவல் பொய்யானது என்று உறுதி செய்தார்.

மேலும் செல்வக்குமாரும் இந்த நியூஸ்கார்ட் போலியானது என்று அவரது டிவிட்டர் பதிவிட்டிருப்பதை நம்மால் காண முடிந்தது.

Also Read: சிறுபான்மையினர் குறித்த அமெரிக்க பத்திரிக்கையாளர் கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றாரா பிரதமர் மோடி?

Conclusion

பாஜக நிர்வாகி செல்வக்குமார் எழுதி கொடுத்ததையே பதிவிட்டேன் உமா கார்கி கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Phone Conversation with Vinoth Kumar, Thanthi TV, Dated June 24, 2023

Phone Conversation with S.G.Suryah, State Secreatary, Tamilnadu BJP, Dated June 24, 2023
Phone Conversatin with M.S.Balaji, IT Wing Head, Tamilnadu BJP, Dated June 24, 2023

Tweet from Selva Kumar, Vice President, Industrial cell,Tamilnadu BJP, Dated June 24, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular