வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Checkபாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் தலைமையகத்தை கைப்பற்றியதாக பரவும் சிரியா வீடியோ!

பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் தலைமையகத்தை கைப்பற்றியதாக பரவும் சிரியா வீடியோ!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் தலைமையகத்தை கைப்பற்றினர்.

Fact: வைரலாகும் வீடியோ 8 ஆண்டுகளுக்கு முன்பு 2015 ஆம் ஆண்டு சிரியாவில் எடுக்கப்பட்ட பழைய வீடியோவாகும்.

பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் தலைமையகத்தை கைப்பற்றியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்கள் பரவி வருகின்றது.

பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் தலைமையகத்தை கைப்பற்றியதாக பரவும் வீடியோத்தகவல்

Facebook Link

பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் தலைமையகத்தை கைப்பற்றியதாக பரவும் வீடியோத்தகவல்

Facebook Link

பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் தலைமையகத்தை கைப்பற்றியதாக பரவும் வீடியோத்தகவல்

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: கேரள லுலு மாலில் இந்திய தேசியக் கொடியை விட பாகிஸ்தான் கொடி பெரியதாக வைக்கப்பட்டதா?

Fact Check/Verification

பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் தலைமையகத்தை கைப்பற்றியதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடினோம்.

இத்தேடலில் Halab Today TV எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் மார்ச் 28, 2015 அன்று போராட்டக்காரர்கள் சிரியாவின் இத்லிப் நகரை கைப்பற்றியதாக குறிப்பிட்டு வைரலாகும் இதே வீடியோவை பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.

தொடர்ந்து தேடியதில் இச்சம்பவம் குறித்து enabbaladi.net எனும் ஊடகம் வெளியிட்டிருந்த செய்தியில் வைரலாகும் வீடியோவிலிருக்கும் ஒரு காட்சி இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.

பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் தலைமையகத்தை கைப்பற்றியதாக பரவும் வீடியோத்தகவல்
Screengrab from Enab Baladi

இவற்றை தவிர்த்து மேலும் சில ஊடகங்களில் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அவற்றை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.

இதனடிப்படையில் காண்கையில் வைரலாகும் வீடியோ தற்போது இஸ்ரேலில் எடுக்கப்பட்டதல்ல; அது கடந்த 2015 ஆம் ஆண்டு சிரியாவில் எடுக்கப்பட்டது என அறிய முடிகின்றது.

Also Read: இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் இறந்த காஸாவின் குழந்தைகள் என்று பரவும் சிரியாவின் பழைய படம்!

Conclusion

பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் தலைமையகத்தை கைப்பற்றியதாக பரவும் வீடியோத்தகவல் முற்றிலும் தவறானதாகும். உண்மையில் அவ்வீடியோ 8 ஆண்டுகளுக்கு முன்பு 2015 ஆம் ஆண்டு சிரியாவிலிருக்கும் இத்லிப் நகரை இஸ்லாமியர்கள் படை கைப்பற்றியபோது எடுக்கப்பட்டதாகும்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Facebook post by Halab Today TV on 28 March 2015
Report published by Enab Baladi on 28 March 2022

(இச்செய்தியானது ஏற்கனவே நியூஸ்செக்கர் உருதுவில் பிரசுரமாகியுள்ளது.)

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular