வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Checkநாதக 19 சதவீதம் வாக்குகள் பெறும் என்று நியூஸ் 18 தமிழ்நாடு கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?

நாதக 19 சதவீதம் வாக்குகள் பெறும் என்று நியூஸ் 18 தமிழ்நாடு கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் நாதக 19 சதவீதம் வாக்குகள் பெறும் என்று நியூஸ் 18 தமிழ்நாடு கருத்துக்கணிப்பு வெளியிட்டது.

Fact: வைரலாகும் கருத்துக்கணிப்பு எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.

வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் நாதக 19 சதவீதம் வாக்குகள் பெறும் என்று நியூஸ் 18 தமிழ்நாடு கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது.

நாதக 19 சதவீதம் வாக்குகள் பெறும் என்று நியூஸ் 18 தமிழ்நாடு கருத்துக்கணிப்பு

X Link | Archive Link

நாதக 19 சதவீதம் வாக்குகள் பெறும் என்று நியூஸ் 18 தமிழ்நாடு கருத்துக்கணிப்பு

Archive Link

நாதக 19 சதவீதம் வாக்குகள் பெறும் என்று நியூஸ் 18 தமிழ்நாடு கருத்துக்கணிப்பு

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: உ.பி.யின் நிலை என்று பரப்பப்படும் பஞ்சாப் வன்முறை வீடியோ!

Fact Check/Verification

2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் நாதக 19 சதவீதம் வாக்குகள் பெறும் என்று நியூஸ் 18 தமிழ்நாடு கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அப்படம் குறித்து தேடினோம்.

இத்தேடலில் நியூஸ் 18 தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்ட உண்மையான கருத்துக்கணிப்பு படத்தை கண்டறிய முடிந்தது. அப்படத்தில் நாதக என்கிற வார்த்தையே இடம்பெற்றிருக்கவில்லை. நாதக என்றிருக்கும் இடத்தில் மற்றவை என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் பார்க்கையில் ‘மற்றவை’ என்று குறிப்பிடப்பட்டிருந்த இடத்தில் நாதக என்று மாற்றி எடிட் செய்து வைரலாகும் படம் உருவாக்கப்பட்டுள்ளது என அறிய முடிகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான கருத்துக்கணிப்பு படத்தையும் எடிட் செய்யப்பட்ட கருத்துக்கணிப்பு படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

தொடர்ந்து தேடுகையில் இந்த கருத்துக்கணிப்பு குறித்து நியூஸ் 18 தமிழில் செய்தி ஒன்று வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அந்த செய்தியில் (01:04 நேரத்தில்) மற்றவை என்று குறிப்பிட்ட பகுதியை நாதக உள்ளிட்ட மற்ற கட்சிகள் என்று குறிப்பிட்டிருந்தை காண முடிந்தது. அதாவது நாதக மற்றும் குறிப்பிடப்படாத மற்ற கட்சிகள் என்று பொருள்படும்.

 Also Read: குஜராத்தில் ராகுல் காந்தியின் தெருமுனை பிரச்சாரம் என்று பரவும் கேரளா வீடியோ!

Conclusion

2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் நாதக 19 சதவீதம் வாக்குகள் பெறும் என்று நியூஸ் 18 தமிழ்நாடு கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்ட போலி புகைப்படமாகும். உண்மையில் அந்த அந்த கருத்துக்கணிப்பில் மற்றவை என்று குறிப்பிடப்பட்டிருந்த பகுதியை எடிட் செய்து நாதக என்று மாற்றியுள்ளனர்.

இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
Tweet from News 18 Tamilnadu, Dated March 13, 2024
Youtube video from News 18 Tamilnadu, Dated March 14, 2024

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular