Authors
Claim: கண்ணூர் விமான நிலையத்தில் ஒருவர் சட்டை பாக்கெட்டில் பவர்பேங்கை வைத்து செல்போனில் சார்ஜ் போட்டுக்கொண்டிருக்கும்போது, பவர்பேங்க் வெடித்து, அவர்மீது தீப்பிடித்தது.
Fact: இத்தகவல் தவறானதாகும். உண்மையில் வீடியோவில் காணப்படும் நபர் அவர்மீது அவரே தீயிட்டுள்ளார். இச்சம்பவமானது மொரோக்கோவில் நடந்துள்ளது.
கண்ணூர் விமான நிலையத்தில் ஒருவர் சட்டை பாக்கெட்டில் பவர்பேங்கை வைத்து செல்போனில் சார்ஜ் போட்டுக்கொண்டிருக்கும்போது பவர்பேங்க் வெடித்து, அவர்மீது தீப்பற்றியதாக வீடியோ ஒன்று வாட்ஸ்ஆப்பில் பரவியதை தொடர்ந்து, நியூஸ்செக்கரின் வாட்ஸ்ஆப் டிப்லைன் எண்ணுக்கு (+91 9999499044) இந்த வீடியோத்தகவலை வாசகர் ஒருவர் அனுப்பி இதுக்குறித்து கேட்டிருந்தார்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கெஜ்ரிவால் இல்லத்தில் நடந்த சண்டை என்று பரப்பப்படும் வீடியோ உண்மையானதா?
Fact Check/Verification
கண்ணூர் விமான நிலையத்தில் பவர்பேங்க் வெடித்து ஒருவர் மீது தீப்பற்றியதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து அவ்வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடினோம்.
இத்தேடலில் Morocco World News எனும் இணைய ஊடகத்தில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவமானது மொரோக்கோ நாட்டின் அகதிர் நகரில் நடந்ததாக செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அச்செய்தியில் அந்நபர் தனக்குத்தானே தீயிட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுக்குறித்து தொடர்ந்து தேடுகையில் அகதிர் 24 எனும் மொரோக்கோவின் இணைய ஊடகத்தில் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
அச்செய்தியில் வீடியோவில் காணப்பாடும் நபர் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை திருடியதை செக்யூரிட்டி கண்டுப்பிடித்து அவர் திருடிய பொருட்களுக்கான பணத்தை கட்ட செய்ததாகவும், பணத்தை கட்டி வெளியே சென்ற அந்நபர் சிலநேரம் கழித்து திரும்பி வந்து தீப்பிடிக்கக்கூடிய திரவத்தை அவர்மீது ஊற்றிக்கொண்டு தனக்குத்தானே தீயிட்டுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து தீயணைக்கப்பட்டு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டதாகவும், தீயினால் அவர் உடல் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து தேடுகையில் கண்ணூர் விமான நிலையத்தில் இச்சம்பவம் நடந்ததாக பரப்பப்படும் தகவலானது தவறானத்தகவல் என்று கண்ணூர் விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
Also Read: இந்து கோயிலை இடித்துக் கட்டப்பட்ட தென்காசி மசூதி என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Conclusion
கண்ணூர் விமான நிலையத்தில் பவர்பேங்க் வெடித்து ஒருவர் மீது தீப்பற்றியதாக பரவும் வீடியோத்தகவல் முற்றிலும் தவறானதாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Report by Morocco World News on June 4, 2018
Report by Agadir 24 on June 4, 2018
Facebook Post by Kannur International Airport Limited on March 23, 2019
(இச்செய்தியானது நியூஸ்செக்கர் மலையாளத்தில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது.)
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)