Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Entertainment
Claim: என் வாழ்க்கையை அழித்தது ரஜினிதான் – மனீஷா கொய்ராலா
Fact: பாபா படத் தோல்வியால் தென்னிந்தியாவில் மார்க்கெட் இழந்தேன் என்றே மனீஷா கூறினார்
என் வாழ்க்கையை அழித்தது ரஜினிதான் என்று பாலிவுட் நடிகை மனீஷா கொய்ராலா கூறியதாக சில இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: இந்தியப் பிரதமராக ராகுல் காந்திக்கு பெருகும் ஆதரவு என்று பரவும் பழைய கருத்துக்கணிப்பு!
என் வாழ்க்கையை அழித்தது ரஜினிதான் என்று மனீஷா கொய்ராலா கூறியதாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
அந்த ஆய்வில் இத்ததகவல் முற்றிலும் பொய்யானது என்பதை அறிய முடிந்தது. மனீஷா கொய்ராலா சமீபத்தில் O2india என்கிற யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை தந்துள்ளார். அப்பேட்டியில் பாபா திரைப்படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு,
நேற்று என் படப்பிடிப்பில் பாபா 20 ஆண்டுகளுக்குப் பின் சூப்பர் ஹிட்டாகியுள்ளது என்று கூறினேன். பாபாதான் என்னுடைய பெரிய தமிழ் அல்லது தென்னிந்திய திரைப்படம். ஆனால் அது மிகப்பெரிய தோல்வியை தழுவியது. எங்கள் அனைவருக்கும் அது மிகப்பெரிய வருத்தத்தை தந்தது. முக்கியாக எனக்கு அதிக வருத்தத்தை தந்தது. ஏனெனில் ரஜினிகாந்த் போன்று மாபெரும் நடிகருடன் நடித்த படம் தோல்வியை தழுவியது. இப்போது இருக்கும் நடிகைகளுக்கு அது பழக்கமான விஷயமாக இருக்கலாம். ஆனால் அச்சமயத்தில் ரஜினிகாந்துடன் நடித்தால் கண்டிப்பாக ஹிட்டாகும். அந்த படத்தின் மீது நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அப்படம் தோல்வியை தழுவியது. இதனால் தென்னிந்திய மொழிகளில் என்னுடைய கேரியர் இத்துடன் முடிந்து விடும் என்று நான் நினைத்தேன். ஒரு வகையில் அதேதான் நடந்தது. பாபாவுக்கு முன் நல்ல நல்ல தென்னிந்திய படங்களில் நான் நடித்தேன். ஆனால் பாபாவுக்கு பிறகு எனக்கு எந்த படமும் வரவில்லை. இது வருத்தமான விஷயம்தான். ஏனெனில் தென்னிந்திய திரைப்பட உலகம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்களுடைய ஒழுக்கம், மரியாதை, போன்றைவை எனக்கு பிடிக்கும்...
என்று மனீஷா கொய்ராலா பேசி இருந்தார். தொடர்ந்து ரஜினிகாந்த் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு,
நாங்கள் அனைவரும் அவர் குறித்து நல்ல விஷயங்களையே கேட்டுள்ளோம். நான் அவருடன் வேலை செய்யும்போது அவர் மிகப்பெரிய நடிகராக இருந்தும் கூட மிகவும் பணிவாகவும் எளிமையாகவும் இருந்தார். அவருடன் வேலை செய்ததால் பல நல்ல ஞாபகங்கள் கிடைத்தது. அவர் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது. ஏனெனில் பாபா தோல்வி அடந்தபோது அவர் அனைத்து பணத்தையும் திரும்பி தந்துள்ளார். அவர் அலுவலகத்தின் முன் பாபாவிற்காக பணம் கொடுத்தவர்கள், விநியோகிஸ்தர்கள் வரிசையாக நிற்கையில், அனைவரையும் ஒவ்வொருவராக அழைத்து பணம் கொடுத்தார் என்று எனக்கு தெரிய வந்தது. இதுபோன்று எங்கேயும் நீங்கள் கேட்டிருக்க மாட்டீர்கள். இப்படி ஒருவர் செய்தார் என்று அறியும்போது அது மிகப்பெரிய பாடமாக இருந்தது. அவர் மீது ஒரு தனி மரியாதையே பிறந்தது.
என்று கூறி இருந்தார்.
இதனடிப்படையில் பார்க்கையில் பாபா தோல்விக்கு பின் தனக்கு பட வாய்ப்பு நின்றதாக மனீஷா கூறி இருப்பதை காண முடிந்தது. ஆனால் அதற்கு ரஜினிகாந்துதான் காரணம் என்று அவர் கூறி இருக்கவில்லை. மாறாக அவரை புகழ்ந்தே அவர் பேசியுள்ளார்.
Also Read: Fact Check: 1971ல் வங்கதேச சுதந்திர போரில் பங்குப்பெற்ற பெண்களின் படம் என்று பரவும் படம்!
என் வாழ்க்கையை அழித்தது ரஜினிதான் என்று மனீஷா கொய்ராலா கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Youtube Video from O2india, Dated 19 Jan, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
October 11, 2024
Ramkumar Kaliamurthy
August 24, 2024
Ramkumar Kaliamurthy
July 8, 2024