சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact CheckFact Check: கனடாவில் மீன் தாக்கியதில் உருக்குலைந்த கப்பல் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Fact Check: கனடாவில் மீன் தாக்கியதில் உருக்குலைந்த கப்பல் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim கனடாவில் மீன் தாக்குதலில் உருக்குலைந்த கப்பல் Fact வைரல் வீடியோ AI மூலமாக எடிட் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டதாகும்.

கனடாவில் சுறா மீன் தாக்கியதில் உருக்குலைந்த கப்பல் என்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

கனடாவில்

”கனடாவில் மீன் தாக்குதலில் உருக்குலைந்த கப்பல்” என்பதாக இந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது.

Screenshot from twitter @kavingarKarthi
Screenshot from Facebook/arumugam.rs

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ரஷ்ய பாராளுமன்றத்தில் காமராஜர் படம் இடம்பெற்றிருப்பதாக பரவும் எடிட் செய்யப்பட்ட படம்!

Factcheck / Verification

கனடாவில் சுறா மீன் தாக்கியதில் உருக்குலைந்த கப்பல் என்று பரவும் வீடியோ தகவல் பற்றிய உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரல் வீடியோவை கீ-ப்ரேம்களாகப் பிரித்து தேடியபோது அது Aleksey_n என்கிற டிஜிட்டல் க்ரியேட்டருடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டிருப்பதை நமக்குக் காட்டியது.

கடந்த மார்ச் 10, 2023 அன்று அவருடைய ட்விட்டர் பக்கத்தில், “i am finally done. #Megalodon #Animation #Digitalart #CGI #3D” என்று இந்த வீடியோவைப் பதிவிட்டுள்ளார் Aleksey. மேலும், இதனைத் தன்னுடைய இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளார்.

Instagram will load in the frontend.

டிஜிட்டல் கிரியேட்டர் மற்றும் அனிமேட்டரான Aleksey இது போன்று மேலும் பல்வேறு AI வீடியோக்களைத் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

அவர் குறிப்பிட்ட சுறாவை Megalodons ஆக வடிவமைத்துள்ளார். இந்த வகை சுறா மீன்கள் அழிந்த அரிய வகை உயிரினமாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான The meg என்கிற திரைப்படக் கதாப்பாத்திரத்தை வைத்தே இந்த வீடியோவை உருவாக்கிப் பகிர்ந்துள்ளார் Aleksey. அதற்கான ஹேஸ்டேக்குகளையும் அவர் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: நடிகை மற்றும் பாஜக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ராகுல் காந்திக்கு ஆதரவாக ட்வீட் எனப் பரவும் போலி நியூஸ்கார்ட்!

Conclusion

கனடாவில் சுறா மீன் தாக்கியதில் உருக்குலைந்த கப்பல் என்று பரவும் வீடியோ உண்மையில் அனிமேஷன் மூலமாக உருவாக்கப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources Twitter Post From, Aleksey__n, Dated March 10, 2023, Instagram Post From, Aleksey, Natural History Museum, Hindu Tamil Article, Dated July 20, 2018


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular