செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 8, 2024
செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 8, 2024

HomeFact Checkஇஸ்லாமிய நாடுகளில் இருந்து வரும் கேஸ் சிலிண்டர்களை புறக்கணித்து விறகடுப்பு உபயோகிப்போம் என்றாரா அண்ணாமலை?

இஸ்லாமிய நாடுகளில் இருந்து வரும் கேஸ் சிலிண்டர்களை புறக்கணித்து விறகடுப்பு உபயோகிப்போம் என்றாரா அண்ணாமலை?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

இஸ்லாமிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் கேஸ் சிலிண்டர்களை புறக்கணித்து விறகடுப்புகளை உபயோகிப்போம் என்று பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை கூறியதாகப் புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

இஸ்லாமிய
Source: Facebook

நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வை எட்டியுள்ளது. சிலிண்டருக்கு ரூபாய் 25.50 உயர்ந்து கிட்டதட்ட 900 ரூபாயை எட்டியுள்ளது. இதனால், மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவரான அண்ணாமலை “இஸ்லாமிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் கேஸ் சிலிண்டர்களை புறக்கணித்து பாரதப் பண்பாட்டு அடையாளமான விறகடுப்பை உபயோகிப்போம்” என்பதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

இஸ்லாமிய
Source: Facebook

Facebook Link

இஸ்லாமிய
Source: Facebook

Facebook Link

இஸ்லாமிய
Source: Facebook

Facebook Link

Also Read: இந்துக்கள் பாதிக்கப்பட்டால் திமுகவுக்கு என்ன கவலை என்றாரா அண்ணாமலை?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact check/ Verification:

இஸ்லாமிய நாடுகளில் இருந்து வரும் கேஸ் சிலிண்டர்களைப் புறக்கணித்து விறகடுப்புகளை உபயோகிப்போம் என்று பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

அப்போது, குறிப்பிட்ட அந்த நியூஸ் கார்டு கதிர் செய்திப்பிரிவு வெளியிட்டது போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. எனவே, கதிர் செய்திகளின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் ஆராய்ந்தபோது குறிப்பிட்ட புகைப்படம் போலி என்று பதிவிடப்பட்டுள்ளது நமக்குக் கிடைத்தது.

இஸ்லாமிய
Source: Facebook

Facebook Link

கதிர் செய்திகளின் நியூஸ் கார்டினை எடிட் செய்து, அண்ணாமலை இவ்வாறு சொல்லியதாக வெளியிட்டுள்ளனர். பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை தரப்பிலும் இதனை போலி என்று உறுதி செய்தனர்.

Conclusion:

இஸ்லாமிய நாடுகளில் இருந்து வரும் கேஸ் சிலிண்டர்களைப் புறக்கணித்து விறகடுப்புகளை உபயோகிப்போம் என்று பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources:

Kathir News: https://www.facebook.com/KathirNews/posts/4307671809315810

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

Most Popular