ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkஅண்ணாமலை காமராசர் சிலையை வணங்கியதாக பரவும் எடிட் படம்!

அண்ணாமலை காமராசர் சிலையை வணங்கியதாக பரவும் எடிட் படம்!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: அண்ணாமலை காமராசர் சிலையை வணங்கியதாக பரவும் படம்!

Fact: அண்ணாமலை மாதா சிலையை வணங்கிய படத்தை எடிட் செய்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

“கல்வி கண் திறந்த காமராஜர் வழியில் அண்ணன் அண்ணாமலை” என்று குறிப்பிட்டு அண்ணாமலை காமராசர் சிலையை வணங்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அண்ணாமலை காமராசர் சிலையை வணங்கியதாக வைரலாகும் புகைப்படம்
Screengrab from Twitter@praveen_kgl

Twitter Link | Archived Link

அண்ணாமலை காமராசர் சிலையை வணங்கியதாக வைரலாகும் புகைப்படம்
Screengrab from Facebook/balu.goundar

Archived Link

அண்ணாமலை காமராசர் சிலையை வணங்கியதாக வைரலாகும் புகைப்படம்
Screengrab from Facebook/tamilnadu.pmo

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: இந்திய தேசிய கீதமான ‘ஜன கண மண..’ உலகின் சிறந்த தேசிய கீதமாக UNESCO – வால் அறிவிக்கப்பட்டதா?

Fact Check/Verification

அண்ணாமலை காமராசர் சிலையை வணங்கியதாக புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து கூகுள் லென்ஸை பயன்படுத்தி அப்படம் குறித்து தேடினோம். 

இத்தேடலில் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை பயணத்தின்போது தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தில் வழிபட்டதாக கூறி புகைப்படங்கள் சிலவற்றை கடந்த ஞாயிறன்று (ஆகஸ்ட் 13) பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.

இப்படங்களில் அண்ணாமலை மாதாவை வணங்கும் ஒரு புகைப்படமும் இடம்பெற்றிருந்தது.

அண்ணாமலை காமராசர் சிலையை வணங்கியதாக வைரலாகும் புகைப்படம்

அப்படத்தை எடிட் செய்தே அண்ணாமலை காமராசர் சிலையை வணங்கும் புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான படத்தையும் எடிட் செய்யப்பட்ட படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

எடிட் செய்யப்பட்ட படத்தில் காணப்படும் காமராசர் சிலை குறித்து தேடுகையில், அச்சிலையானது திருமங்கலம் PKN மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளதாக விக்கிப்பீடியா தளத்தில் குறிப்பிட்டிருப்பதை காண முடிந்தது.  

அண்ணாமலை காமராசர் சிலையை வணங்கியதாக வைரலாகும் புகைப்படம்

Also Read: சுதந்திர தின பாதுகாப்பு பணியில் பெண் ராணுவ வீரர் என்று பரவும் 2019ஆம் ஆண்டு புகைப்படம்!

Conclusion

அண்ணாமலை காமராசர் சிலையை வணங்கியதாக வைரலாகும் புகைப்படமானது எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்ட படம் என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
Tweet from Annamalai, State President, BJP, Dated August 13, 2023
Wikipedia

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular