புதன்கிழமை, மே 15, 2024
புதன்கிழமை, மே 15, 2024

HomeFact Checkபிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நபருக்கு ஷூவில் தண்ணீர் கொடுக்கப்பட்டதாகப் பரவும் வீடியோ தகவல் உண்மையா?

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நபருக்கு ஷூவில் தண்ணீர் கொடுக்கப்பட்டதாகப் பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: தலித்துகள் மோடிக்கு வாக்களிக்கும் முன் இந்த வீடியோவை கண்டிப்பாக பார்க்கவும்

Fact: வைரலாகும் வீடியோ நிகழ்வு குறிப்பிட்ட நபர் திருமணமான பெண்ணுடன் திருமணம் கடந்த உறவில் இருந்த காரணத்தால் நடைபெற்றுள்ளது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு ஷூ மூலமாக தண்ணீர் குடிக்க கொடுக்கப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“தலித்துகள் மோடிக்கு வாக்களிக்கும் முன் இந்த வீடியோவை கண்டிப்பாக பார்க்கவும்..இடஒதுக்கீடு இருந்தபோதிலும், தாழ்த்தப்பட்ட ஏழைகளுக்கு செருப்பு தண்ணீர் கொடுக்கப்பட்டது. பிஜேபி இடஒதுக்கீட்டை ஒழித்தால், இவர்கள் எந்த அளவுக்கு அடாவடித்தனம் செய்வார்கள்…?” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.

பிற்படுத்தப்பட்ட
Screenshot from X @karikaalan555

X Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்படுவதாக பரவும் தகவல் உண்மையானதா?

Fact Check/Verification

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு ஷூ மூலமாக தண்ணீர் குடிக்க கொடுக்கப்பட்டதாகப் பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அந்த வீடியோ கடந்த 2020ஆம் ஆண்டைச் சேர்ந்தது என்பது நமக்குத் தெரிய வந்தது.

குறிப்பிட்ட வீடியோ கடந்த 2020ஆம் ஆண்டு ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தின் சுமர்பூரில் குறிப்பிட்ட நபர் திருமணமான பெண் ஒருவருடன் தவறான தொடர்பில் இருந்ததாக கூறி குறிப்பிட்ட தண்டனையை பஞ்சாயத்து மூலமாக நிறைவேற்றியுள்ளனர் என்று செய்திகளில் வெளியாகி உள்ளது.

கடந்த ஜூன் 11, 2020 அன்று நடைபெற்ற இந்த நிகழ்வின்போது அந்த நபர் மேலும், மதுவுடன் சிறுநீர் கலந்து குடிக்க வைக்கப்பட்டதாகவும், இந்நிகழ்வு குறித்து சுமர்பூர் காவல்துறை ஆகஸ்டு 15 அன்று வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த மேலும் செய்திகளை இங்கே படியுங்கள்.

 Also Read: கள்ள ஓட்டை மநீம நிர்வாகி தட்டிக் கேட்கும் வீடியோ 2024 பொதுத்தேர்தலில் எடுக்கப்பட்டதா?

Conclusion

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு ஷூ மூலமாக தண்ணீர் குடிக்க கொடுக்கப்பட்டதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
Report by News 18 Hindi , Dated June 18, 2020
YouTube Video From, Rangla TV


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular