ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 3, 2024
ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 3, 2024

HomeFact Checkபிறந்தநாளை இறந்த நாளாக மாற்றிய இளைஞர்கள்; வைரலாகும் வீடியோ உண்மையானதா?

பிறந்தநாளை இறந்த நாளாக மாற்றிய இளைஞர்கள்; வைரலாகும் வீடியோ உண்மையானதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

பிறந்தநாளை இறந்த நாளாக மாற்றிய பொறுப்பற்ற இளைஞர்கள் என்று கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பிறந்தநாளை இறந்த நாளாக மாற்றிய பொறுப்பற்ற இளைஞர்கள் என்று வைரலாகும் வீடியோ

சமூக வைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அவ்வீடியோவில் இளைஞர்கள் சிலர் தன் நண்பர் ஒருவரின் பிறந்த நாளை முகத்தில் கேக் பூசியும், அவரை அடித்தும் கொண்டாடுகின்றனர். ஒரு கட்டத்தில் அடி வாங்கும் நபர் நினைவிழந்து போகின்றார். இதனை உணர்ந்த இளைஞர்கள் பதற்றமடைந்து அவருக்கு நினைவு வரவழைக்க முயற்சிக்கின்றனர். ஆனால் அவர்கள் முயற்சி ஏதும் பலனிக்கவில்லை. மயக்கமுற்ற நபர் அதே நிலையிலேயே இருக்கின்றார். இதனைத் தொடர்ந்து அந்நபரை அந்த இளைஞர்கள் மருத்துவமனைக்கு  கொண்டு செல்கின்றனர்.

Courtesy: Hamsa Nandini (Facebook Page)

இந்த வீடியோவை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, படித்த இளைஞர்களின் பொறுப்பின்மை காரணமாக பிறந்தநாளை இறந்த நாளாக மாற்றிவிட்டனர் என்று பதிவு செய்து வருகின்றனர்.

பிறந்தநாளை இறந்த நாளாக மாற்றிய பொறுப்பற்ற இளைஞர்கள் என்று வைரலாகும் வீடியோ - 1

Twitter Link | Archive Link

பிறந்தநாளை இறந்த நாளாக மாற்றிய பொறுப்பற்ற இளைஞர்கள் என்று வைரலாகும் வீடியோ - 2

Facebook Link

பிறந்தநாளை இறந்த நாளாக மாற்றிய பொறுப்பற்ற இளைஞர்கள் என்று வைரலாகும் வீடியோ - 3

Facebook Link


Also Read:
 ‘டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று கொடுத்த வாக்குறுதி பொய்யானது’ என்று கனிமொழி கூறியதாக வதந்தி

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact check/ Verification

பிறந்தநாளை இறந்த நாளாக மாற்றிய பொறுப்பற்ற இளைஞர்கள் என்று கூறி வைரலாகும் வீடியோவின் பின்னணியில்  உள்ள உண்மைத்தன்மை குறித்து அறிய இதுக்குறித்து தேடினோம்.

இத்தேடலில் வைரலாகும் வீடியோவானது சித்தரிக்கப்பட்ட ஒன்று என்பதை நம்மால் அறிய முடிந்தது. வைரலாகும் வீடியோ மாடல் அழகியும் நடிகையுமான ஹம்சா நந்தினி என்பவரின் ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவானது விழிப்புணர்வுக்காக உருவாக்கப்பட்டது எனவும் இவ்வீடியோவில் இருக்கும் நிகழ்வுகள் புனையப்பட்டது எனவும் இவ்வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்ததை நம்மால் காண முடிந்தது.

பிறந்தநாளை இறந்த நாளாக மாற்றிய பொறுப்பற்ற இளைஞர்கள் என்று வைரலாகும் வீடியோவின் உண்மை - 1

மேலும் இவ்வீடியோவின் இறுதியிலும் இதே தகவல் குறிப்பிடப்பட்டிருந்ததை நம்மால் காண முடிந்தது.

பிறந்தநாளை இறந்த நாளாக மாற்றிய பொறுப்பற்ற இளைஞர்கள் என்று வைரலாகும் வீடியோவின் உண்மை - 2

மேலும் இந்த குறிப்பிட்ட ஃபேஸ்புக் பக்கத்தில், வைரலாகும் வீடியோவைப் போல் பல விழிப்புணர்வு வீடியோக்கள் பதிவிடப்பட்டிருந்ததையும் நம்மால் காண முடிந்தது.

Also Read: பாஜகவோடு அதிமுகவை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அன்வர் ராஜா நீக்கம்; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?

Conclusion

பிறந்தநாளை இறந்த நாளாக மாற்றிய பொறுப்பற்ற இளைஞர்கள் என்று கூறி சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவானது விழிப்புணர்வுக்காக சித்தரிக்கப்பட்ட வீடியோ என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Misplaced Context

Our Sources

Hamsa Nandini


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular