புதன்கிழமை, ஏப்ரல் 24, 2024
புதன்கிழமை, ஏப்ரல் 24, 2024

HomeFact Checkபஹ்ரைன் மன்னர் துப்பாக்கி ஏந்திய ரோபோவுடன் துபாய் விமான நிலையம் வந்தாரா?

பஹ்ரைன் மன்னர் துப்பாக்கி ஏந்திய ரோபோவுடன் துபாய் விமான நிலையம் வந்தாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

பஹ்ரைன் மன்னர் துப்பாக்கி ஏந்திய ரோபோவுடன் துபாய் விமான நிலையம் வந்ததாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பஹ்ரைன் மன்னர்  துப்பாக்கி ஏந்திய ரோபோவுடன் துபாய் விமான நிலையம் வந்ததாக பரவும் வீடியோ.

வைரலாகும் இவ்வீடியோவில் அரபு உடை தரித்து ஒருவர் நடந்து வருகின்றார். அவர் பின்னே உயரமான ரோபோ ஒன்று நடந்து வருகின்றது. அரபு உடை அணிந்திருக்கும் அந்த நபர் பஹ்ரைன் நாட்டின் மன்னர் எனவும், அவர் பின்னே நடந்து வந்த ரோபோ 360 கேமராக்களையும், கைத்துப்பாக்கியையும் கொண்டுள்ளதாகவும் அவ்வீடியோவில்  குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இவ்வீடியோவானது துபாய் விமான நிலையத்தில் எடுக்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Archieve Link

பஹ்ரைன் மன்னர்  துப்பாக்கி ஏந்திய ரோபோவுடன் துபாய் விமான நிலையம் வந்ததாக பரவும் வீடியோ - 1

Facebook Link

பஹ்ரைன் மன்னர்  துப்பாக்கி ஏந்திய ரோபோவுடன் துபாய் விமான நிலையம் வந்ததாக பரவும் வீடியோ - 2

Facebook Link

Also Read: பெண்களுக்காக 9969777888 எனும் உதவி எண்ணை தமிழக காவல்துறை அறிவித்துள்ளதா?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact check/ Verification

பஜ்ரைன் மன்னர்  துப்பாக்கி ஏந்திய ரோபோவுடன் துபாய விமான நிலையம் வந்ததாக கூறி வைரலாகும் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து அறிய, அவ்வீடியோ ஒவ்வொரு கீ ஃபிரேம்களாக பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம்.

இதன் மூலம் கல்ஃப் நியூஸ் மற்றும் காலீஜ் டைம்ஸ் என இரு ஊடகங்களில் வைரலாகும் வீடியோ தொடர்பாக செய்தி வந்திருந்ததை நம்மால் அறிய முடிந்தது.

பஹ்ரைன் மன்னர்  துப்பாக்கி ஏந்திய ரோபோவுடன் துபாய் விமான நிலையம் வந்ததாக பரவும் வீடியோ குறித்த உண்மை
Source: Gulf Times

அந்த செய்தியில் வீடியோவில் காணப்படும் ரோபோவின் பெயர் டைட்டன் என்றும், இது சைபர்ஸ்டீன் (Cyberstein) எனும் பிரிட்டிஷ் நிறுவனத்தால் பொழுதுபோக்குக்காக் தயாரிக்கப்பட்டுள்ள ரோபோ என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் இந்த ரோபோ உயரம் 8 அடி எனவும், எடை 60 கிலோ எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.  இந்த ரோபோ அபுதாபியின் International Defence Exhibition, (Idex 2019)-யில் பார்வைக்கு விடப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன்பின் உரிய கீவேர்டுகளை பயன்படுத்தி தேடியதில் பிஜாரே வீடியோஸ் (Bizaree Videos) எனும் யூடியூப் சேனலில் வைரலாகும் வீடியோவின் தொடர்ச்சி பதிவிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. இதில் அந்த ரோபோ பார்வையாளர்களுடன் உரையாடுவதை காண முடிந்தது.

இதை தவிர்த்து  அதன் கை தோள் பட்டையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) கொடி பொறிக்கப்பட்டிருந்ததையும் காண முடிந்தது.

பஹ்ரைன் மன்னர்  துப்பாக்கி ஏந்திய ரோபோவுடன் துபாய் விமான நிலையம் வந்ததாக பரவும் வீடியோ குறித்த உண்மை - 1

மேற்கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் ரோபோ பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்தது அல்ல, அது நடந்து சென்ற பகுதி துபாய் விமான நிலையம் அல்ல என்பது உறுதியாகியது.

இதன்பின் பஹ்ரைன் மன்னர் என்று குறிப்பிடப்படும் ஆசாமி குறித்து ஆய்வு செய்தோம். இதில் பஹ்ரைனின்  தற்போதைய மன்னர் பெயர் ஹமத் பின் இசா அல் காலிஃபா (Hamad bin Isa Al Khalifa)என தெரிய வந்தது.  

பஹ்ரைன் மன்னர்  துப்பாக்கி ஏந்திய ரோபோவுடன் துபாய் விமான நிலையம் வந்ததாக பரவும் வீடியோ குறித்த உண்மை - 3

அவருடைய உருவமும் வைரல் வீடியோவில் காணப்படும் ஆசாமியின் உருவமும் ஒன்றுக்கொன்று மாறுபட்டிருப்பதை  நம்மால் காண முடிந்தது.  

இதன்படி பார்க்கையில் வீடியோவில் காணப்பட்ட நபர் பஹ்ரைன் மன்னர் அல்ல என்பது தெளிவாகியது.

Also Read: எச்.ராஜா எனக்கு தந்தை போன்றவர் என்று சீமான் கூறியதாக வதந்தி!

Conclusion

பஹ்ரைன் மன்னர் துப்பாக்கி ஏந்திய ரோபோவுடன் துபாய விமான நிலையம் வந்ததாக கூறி சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் நபர் பஹ்ரைன் மன்னர் அல்ல, அவர் பின் வந்த ரோபோவும் பாதுகாப்பு ரோபோ கிடையாது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Gulf News

Khaleej times

Bizarre Videos


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular