வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Checkபல்லடக் கூட்டத்தில் பாஜகவினர் மது அருந்தியதாக பரவும் எடிட் வீடியோ!

பல்லடக் கூட்டத்தில் பாஜகவினர் மது அருந்தியதாக பரவும் எடிட் வீடியோ!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: பல்லடக் கூட்டத்தில் பாஜகவினர் மது அருந்தினர்.

Fact: இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் வீடியோ 2021 ஆம் ஆண்டில் வெளிவந்த பழைய வீடியோவாகும். இவ்வீடியோவை எடிட் செய்து நேற்று பல்லடத்தில் நடந்ததாக பொய்யான தகவல் பரப்பப்பட்டு வருகின்றது.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா நேற்று (27/02/2024) திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைப்பெற்றது. இவ்விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.

இக்கூட்டத்தில் அண்ணாமலை பேசிக் கொண்டிருக்கையில் பாஜகவினர் மது அருந்தியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

 இவ்வீடியோவை பலரும் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

பல்லடக் கூட்டத்தில் பாஜகவினர் மது அருந்தியதாக பரவும் வீடியோ

X Link | Archived Link

பல்லடக்  கூட்டத்தில் பாஜகவினர் மது அருந்தியதாக பரவும் வீடியோ

Archived Link

பல்லடக் கூட்டத்தில் பாஜகவினர் மது அருந்தியதாக பரவும் வீடியோ

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: விவசாயிகள் போராட்டத்தில் சுடப்பட்ட குண்டுகள் பாத்திரத்தை துளைத்ததாக பரவும் படம்!

Fact Check/Verification

பல்லடக் கூட்டத்தில் பாஜகவினர் மது அருந்தியதாக வீடியோ வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாகப் பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி, அவ்வீடியோ குறித்து தேடினோம்.

இத்தேடலில் “Alcohol+ UP+ Yogi= Abuser, Painkiller is distributing @narendramodi, Yes. All okay?” என்று குறிப்பிட்டு உத்திரப்பிரதேச காங்கிரஸின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இதே வீடியோவானது டிசம்பர் 20, 2021 அன்று பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது. ஆனால் அவ்வீடியோவில் அண்ணாமலையின் குரல் இடம்பெற்றிருக்கவில்லை.

அதேபோல் இந்திய இளைஞர் காங்கிரஸின் தேசியத் தலைவர் ஸ்ரீனிவாஸும் டிசம்பர் 20, 2021 அன்று அவரது எக்ஸ் பக்கத்தில் இதே வீடியோவை பகிர்ந்திருப்பதை காண முடிந்தது. இவ்வீடியோவிலும் அண்ணாமலையின் குரல் இடம்பெற்றிருக்கவில்லை.

இதனையடுத்து தேடுகையில் நேற்று பல்லடத்தில் நடந்த விழாவின் முழுப்பகுதி சாணக்யா யூடியூப் சேனலில் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது. அதில் 01:40:35 நேரத்தில் அண்ணாமலை பேசிய ஆடியோ, வைரலாகும் வீடியோவிலிருக்கும் ஆடியோவுடன் ஒற்றுப்போவதை நம்மால் காண முடிந்தது.  

இதனடிப்படையில் பார்க்கையில் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட பழைய வீடியோவில் ஆடியோவை நீக்கி, அதற்கு பதில் நேற்றைய விழாவில் அண்ணாமலை பேசிய ஆடியோவை சேர்த்து வைரலாகும் இவ்வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது.

இதே வீடியோவானது அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் பாஜகவினர் மது அருந்தியதாக கூறி சென்ற மாதம் பரப்பப்பட்டது. அதை நியூஸ்செக்கர் சார்பில் ஆய்வு செய்து, அத்தகவல் தவறானது என்று தெளிவுப்படுத்தி இருந்தோம். அச்செய்தியை இங்கே காணலாம்

Also Read: முஸ்லீம்கள் சீக்கியர்கள் வேடத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டதாக பரவும் பொய் தகவல்!

Conclusion

பல்லடக் கூட்டத்தில் பாஜகவினர் மது அருந்தியதாக சமூக ஊடகங்களில் பரவும் வீடியோவானது 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் வெளிவந்த பழைய வீடியோவாகும். இவ்வீடியோ எடிட் செய்து இச்சம்பவமானது நேற்று பல்லடத்தில் நடந்ததாக பொய்யானத் தகவல் பரப்பப்பட்டு வருகின்றது.

இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Video

Our Sources
Tweet from UP Congress, Dated December 20, 2021
Tweet from Srinivas BV, National President, Indian Youth Congress, Dated December 20, 2021
Youtube Video from Chanakya, Dated February 27, 2024

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular