தவெகவின் பூத் கமிட்டி மாநாடு நேற்று கோவையில் நடந்தது. இம்மாநாட்டில் கலந்துக்கொள்ள வந்த தவெக தலைவர் விஜய் மீது செருப்பு வீசப்பட்டதாக கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: இந்திய ராணுவத்தின் நவீனமயமாக்கலுக்கு நன்கொடை வழங்க வங்கிக் கணக்கை தொடங்கியதா மத்திய அரசு?
Fact Check/Verification
தவெக தலைவர் விஜய் மீது செருப்பு வீசப்பட்டதாக பரப்பப்படும் வீடியோவில் பாலிமர் நியூஸின் லோகோ இடம்பெற்றிருப்பதால், அந்த ஊடகத்தின் சமூக ஊடகப் பக்கங்களில் இவ்வீடியோ குறித்து தேடினோம்.
அத்தேடலில் பூ, கட்சி துண்டுகளோடு விஜய் மீது மர்மப்பொருள் வீசப்பட்டதாக கூறி இவ்வீடியோவை பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. அதில் செருப்பு என்று குறிப்பிடவில்லை.

இதையடுத்து தேடுகையில் விஜய் மீது மர்மப்பொருள் வீசப்பட்டதாக கலாட்டா தமிழ் யூடிப் பக்கத்தில் வைரலாகும் வீடியோவின் பக்கவாட்டு காட்சியை பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. அக்காட்சியில் விஜய் மீது வீசப்பட்ட பொருள் செருப்பு அல்ல; தொப்பி என தெளிவாக காண முடிந்தது.

இதனையடுத்து தவெகவின் துணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமாரை தொடர்புக் கொண்டு இதுக்குறித்து விசாரித்தோம். அவர் விஜய் மீது வீசப்பட்டது தொப்பிதான் என உறுதி செய்தார். தொண்டர்கள் மாலையை வீசும்போது தவறுதலாக தொப்பி பறந்ததாகவும், இதை விஜயுடன் வந்த காவலாளிகள் உறுதி செய்ததாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து தேடுகையில் விஜய்மீது தொப்பி எறியப்பட்டதாக நியூஸ் 18 தமிழ், தந்தி தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.


Also Read: பஹல்கம் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 15 பேர் இஸ்லாமியர்கள் என்று பரவும் அட்டவணை உண்மையா?
Conclusion
தவெக தலைவர் விஜய் மீது செருப்பு வீசப்பட்டதாக பரவும் தகவல் தவறானதாகும். உண்மையில் அவர்மீது வீசப்பட்டது செருப்பல்ல; தொப்பியாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Phone Conversation with CTR Nirmalkumar, Deputy General Secretary, TVK
Report from Galatta Tamil, Dated April 27, 2025
Report from News 18 Tamilnadu, Dated April 27, 2025
Report from Thanthi TV, Dated April 27, 2025