சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact Checkசென்னையில் மழைநீர் தேங்கியுள்ளதாக பரவும் 2021 ஆம் ஆண்டின் படம்!

சென்னையில் மழைநீர் தேங்கியுள்ளதாக பரவும் 2021 ஆம் ஆண்டின் படம்!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: சென்னையில் மழைநீர் தேங்கியுள்ளதாக பரவும் படம்!

Fact: இப்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முந்திய பழைய படமாகும்.

‘சென்னையன்ஸ் அடுத்த மாசம் கப்பல் வாங்கிடுங்க படகு பத்தாது’ என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

சென்னையில் மழைநீர் தேங்கியுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படம்

Twitter Link | Archived Link

சென்னையில் மழைநீர் தேங்கியுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படம்

Facebook Link

சென்னையில் மழைநீர் தேங்கியுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படம்

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: அசோக வனத்தில் சீதை அமர்ந்திருந்த கல் அயோத்திக்கு கொண்டு வரப்பட்டதாக பரவும் தவறான வீடியோ!

Fact Check/Verification

சென்னையில் மழைநீர் தேங்கியுள்ளதாக புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து அப்படத்தை ரிவர்ஸ் முறைக்கு உட்படுத்தி அப்படம் குறித்து தேடினோம்.

இத்தேடலில் ”மிதக்கும் சென்னை, தத்தளிக்கும் மக்கள் – கனமழை பரிதாபங்கள்” என்று தலைப்பிட்டு நவம்பர் 09, 2021 அன்று நியூஸ் 18 தமிழ் வெளியிட்டிருந்த செய்தியில் இதே படம் பயன்படுத்தப்பட்டிருந்ததை காண முடிந்தது.

சென்னையில் மழைநீர் தேங்கியுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படம்

தொடர்ந்து தேடியதில் 2021 ஆம் ஆண்டில் வேறு சில ஊடகங்களும் இதே படத்தை பயன்படுத்தி சென்னை மழை குறித்து செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அவற்றை இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.

Also Read: உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்கப்பட்ட காட்சி என்று பரவும் பழைய வீடியோ!

Conclusion

சென்னையில் மழைநீர் தேங்கியுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படமானது 2021 ஆம் ஆண்டில் வெளிவந்த பழைய படமாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
Report from News 18 Tamil, Dated November 09, 2021

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular