Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
2025 ஜூலையில் மின்கட்டணம் உயரவிருப்பதாக பரவும் பட்டியல்.
வைரலாகும் பட்டியல் 2022 ஆம் ஆண்டின் பழைய பட்டியலாகும். மின் உயர்வு குறித்து எவ்வித ஆணையும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிடவில்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
வரும் ஜூலை மாதத்தில் தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயரும் என்று கூறி மின்சார கட்டண பட்டியல் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பாகிஸ்தான் கிரானா மலை மீது இந்தியா நடத்திய தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?
2025 ஜூலையில் மின்கட்டணம் உயரவிருப்பதாக பரவும் தகவல் குறித்து தேடியதில், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் இதுத்தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது;
கடந்த சில நாட்களாக செய்தி ஊடகங்களில் மின் கட்டண உயர்வு குறித்து அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதுக்குறித்து பின்வருமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
தற்சமயம் மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடவில்லை.
எனினும் ஒழுங்குமுணை ஆணையம், மின்கட்டணம் தொடர்பானஆணை வழங்கிடும்போது, அதனை நடைமுறைப்படுத்துகையில் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இருக்கக் கூடாது எனவும், தற்போது வழங்கப்படும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடர வேண்டும் எனவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள் என்று மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் திரு. சா.சிவசங்கர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் பார்க்கையில் ஜூலையில் மின்கட்டணம் உயரும் என்று பரவும் தகவல் அதிகாரப்பூர்வமற்றது எனவும், இதுக்குறித்து எவ்வித ஆணையும் அரசு தரப்பிலிருந்து இதுவரை வெளியிடப்படவில்லை எனவும் தெளிவாகின்றது.
இதனையடுத்து வைரலாகும் பட்டியல் குறித்து அறிய கூகுள் லென்ஸ் மூலம் ரிவர்ஸ் சர்ச் முறையை பயன்படுத்தினோம். அதில் செப்டம்பர் 10, 2022 அன்று “தமிழக அரசின் திருத்தப்பட்ட புதிய மின் கட்டணம் எவ்வளவு? – முழு விவரம்” என்று தலைப்பிட்டு இந்து தமிழ் வெளியிட்டிருந்த செய்தியில் வைரலாகும் பட்டியல் வெளியிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் இதே தினத்தில் (செப்டம்பர் 10, 2022 ) பாலிமர் நியூஸ், புதிய தலைமுறை உள்ளிட்ட ஊடகங்களிலும் வைரலாகும் பட்டியலில் குறிப்பிட்டிருந்த அதே கட்டண உயர்வு தகவல் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.


Also Read: மணிப்பூரில் ஆயுதங்களும், பணங்களும் இந்திய ராணுவத்தால் கைப்பற்றப்பட்டதாக பரவும் வீடியோ உண்மையானதா?
2025 ஜூலையில் மின்கட்டணம் உயரவிருப்பதாக பரவும் பட்டியல் தவறானதாகும். அப்பட்டியல் 2022 ஆம் ஆண்டின் பழைய பட்டியலாகும். மின் உயர்வு குறித்து எவ்வித ஆணையும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிடவில்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Press Release by Tamil Nadu Government, May 20, 2025
Report By Hindu Tamil, Dated September 10, 2022
X post from Polimer News, Dated September 10, 2022
Report By Puthiya Thalaimurai, Dated September 10, 2022
Ramkumar Kaliamurthy
July 23, 2024
Ramkumar Kaliamurthy
May 10, 2024
Ramkumar Kaliamurthy
March 11, 2022